அதிமுக ஒரு ஆலமரம் ; செங்கோட்டையன் சின்ன குருவி... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்...!
புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகள் பயன்படக்கூடிய காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு திமுக ஆட்சி வந்த பிறகு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி அருகே உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்ஐஆர் பணிகள் குறித்தும் விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு அதிமுக நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அதே போல் விருப்பமான பெறுவது தொடர்பான தகவல்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அதிமுக அமைச்சர் சி விஜயபாஸ்கர் கூறுகையில்: காமராஜர் எம்ஜிஆர் கலைஞர் ஜெயலலிதா காலத்தில் எல்லாம் செய்ய நினைத்த திட்டத்தை சாமானிய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகத்தான திட்டம் காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம்.
7000 கோடி நிர்வாக ஒப்புதல் பெற்று காவிரி வைகை குண்டாறு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி 100 பொக்லைன் வெட்டுவதைப் போல புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள குன்னத்தூரில் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கி வைத்தோம். ஏழு மாவட்ட விவசாயிகள் பயன்படக்கூடிய திட்டம்.
இதையும் படிங்க: OPS அடுத்த கட்ட நகர்வு… குழுவை கழகமாக மாற்றிய சம்பவம்… என்ன விஷயம்?
சட்டமன்றத்தில் நான் தொடர்ந்து கவன எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதற்கு இரண்டு முறை நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன் பதிலும் அளித்தார். இருப்பினும் திமுக அரசு நான்கு ஆண்டுகளாக காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கவில்லை.
காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 700 கோடி ரூபாய் அதிமுக ஆட்சி காலத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.
அதில் நிலமெடுப்பு பணிகள் வேகமாக செய்தோம். ஆனால் தற்பொழுது அந்தப் பணியை இந்த ஆட்சியில் மிக மிக மந்தமாக நடைபெறுகிறது.
ஏழு மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி வரும் தலைமுறைக்கான திட்டம். பலமுறை சட்டமன்றத்தில் ஓங்கி குரல் எழுப்பி பேசியும் இந்த திட்டத்தை திமுக அரசு தொடர்பில் போடப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கின்றேன். விவசாயிகள் இந்த திட்டம் நிறைவேற்றப்படாததால் அவர்களது குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர் அதனால் விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் ஒப்புதலை பெற்று
மாபெரும் உண்ணாவிரத போராட்டம் விவசாயிகளைத் திரட்டி புதுக்கோட்டையில் நடத்த இருக்கிறோம்.
700 கோடி ரூபாய் மதிமுக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டாலும் அதில் 41 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாகவும் மீதி தொகை திரும்ப பெறப்பட்டதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வந்துள்ளது குறித்த கேள்விக்கு ஒரு டெண்டர் அறிவிக்கப்பட்டு பணி தொடங்கினால் பணி முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நிதி பெற முடியும் அந்த அடிப்படையில் தான் தற்போது வரை அந்த 700 கோடி ரூபாயிலிருந்து நிதி நிலம் எடுப்பதற்கு வழங்கப்பட்டு வருவதாகவும். ஆனால் அதிமுக ஆட்சிக்குப் பிறகு திமுக ஆட்சி வந்து நான்காண்டு காலமாகியும் இதனால் வரை இந்த திட்டத்திற்கு என்று தனியாக நிதி ஒதுக்கி எந்த ஒரு டென்டரும் வைக்கவில்லை அதைத்தான் நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம் என்று தெரிவித்தார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவ மழை பெய்து விவசாய பணிகள் துரிதமாக நடைபெற்ற வருகிறது. அந்த வேளையில் வேளாண்மைக்கு பயன்படும் மின்மாற்றிகள் பள்ளுத்தடைந்து வரக்கூடிய நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடுகளை மின்சாரத் துறையில் செய்ய முடியவில்லை.
மாற்று மின் மாற்றி இல்லை புதிய மின்மாற்றியும் வரவில்லை, இதனால் 10 15 தினங்களாக விவசாயிகள் விவசாயத்திற்கு நீர் இல்லாமல் வேதனையுடன் இருக்கின்றனர். பயிர்கள் வாடக்கூடிய நிலையில் இருக்கிறது இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக விவசாயிகள் பாதிக்கப்படாமல் மின்மாற்றிகளை தாமதம் இல்லாமல் தடையில்லாமல் தரவேண்டும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லை. இதனால் அங்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கல்லூரி முதல்வர் குடிநீரை வழியும் வேதனையோடே வரக்கூடிய நோயாளிக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தடையின்றி ஏற்பாடு செய்து தர வேண்டும்.
பல்வேறு வியாபாரங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றி நடைபெற்றாலும் குடிநீர் வியாபாரம் சூடாக நடப்பது வேதனையாக இருக்கிறது.
அதேபோல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிமுக ஆட்சி காலத்தில் சிறுநீரக ஒப்பெயர்வு மையம் 90 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. சிறுநீர் சிகிச்சைக்காக கட்டப்பட்டது. டெல்டா பகுதி மக்களுக்காக கட்டப்பட்டது.
எந்த நோக்கத்திற்காக அது கட்டப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தவில்லை. அதனால் இதில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அமைச்சர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக அந்த கட்டிடத்தை பயன்படுத்த வேண்டும்.
நோயாளிகளுக்கு சிகிச்சை முதலில் கொடுக்க வேண்டும் பிறகு தான் காப்பீடு திட்டத்தை கேட்க வேண்டும் ஆனால் தற்பொழுது காப்பீட்டை உறுதி செய்துவிட்டு தான் சிகிச்சையை பிறகு பார்க்கின்றனர் இதனால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் டிஜார்ச் செய்யப்பட்டு காப்பீடு கிடைத்தவுடன் மீண்டும் அனுமதிக்கும் நிலை இருந்து வருகிறது இந்த நிலையையும் போக்க வேண்டும்.
மருத்துவ காலி பணியிடங்கள் தவறான தகவலை தந்து வருகின்றனர். ஒரு பணியிடம் என்பது ஒப்பந்தம் அடிப்படையில் போடுவதோ மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலமாக போடுவதோ nhm மூலமாக போடுவதையும் நாம் நிரந்தர பணியிடம் அமர்த்துவதற்காக சொல்ல முடியாது. முதல்நிலை மருத்துவர்கள் இரண்டு ஆண்டு காலம் கட்டாயம் பணி செய்வதை பணியிடம் என்று சொல்ல முடியாது.
மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டு அதில் பணி ஆணை வழங்கினால் மட்டுமே காலி பணியிடங்கள் 0 சதவீதம் என்று காட்ட முடியும். அதனால் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லும் கருத்து ஏற்புடையது அல்ல.
நான் பலமுறை கூறியுள்ளேன் தமிழ்நாடு சுகாதாரத்துறை ஐசியூவில் இருப்பதாக. பள்ளி மாணவிகள் மது அருந்துவதைப் போல காட்சி வந்தது மிகவும் வருத்தம் வேதனை அளிப்பதாக இருந்தது. மாணவிகள் பள்ளி சீருடைகளில் கும்பலாக அமர்ந்து மது அருந்தும் காட்சியை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. இந்த சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த அரசு என்ன செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று கூறுவார்கள் அதனால் இதனை முக்கிய பிரச்சினை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு எங்கே கிடைத்தது மாணவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதை எல்லாம் ஆராய்ந்து தீவிர விசாரித்து இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக பொதுக்குழுவில் சிறப்பான செய்தியை எடப்பாடி பழனிச்சாமி தந்துள்ளார். தேர்தல் சூடு பிடித்துள்ளது அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் ஜனவரி மாதத்தில் தெரியும். அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். சாகா வரம் பெற்ற எல்லா சோதனையும் தாண்டி இருக்கக்கூடிய இயக்கம் அதிமுக. இந்த அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். 2026 தேர்தலில் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார்.
அதிமுக இதுபோன்ற சூழ்நிலையை எளிமையாக கடந்து வந்த இயக்கம். அதிமுக மிகப்பெரிய ஆலமரம் பல நேரங்களில் இந்த ஆலமரத்தில் பல குருவிகள் அடை காத்திருக்கிறது குஞ்சு பொரித்து இருக்கிறது. அதற்குப் பிறகு பறந்து சென்று இருக்கிறது. ஆனால் ஆலமரம் அப்படியேதான் இருக்கும். அதுதான் அதிமுக இயக்கம். அதனால் செங்கோட்டையன் சொல்வதை எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதிமுக வலிமையோடு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பாஜக கூட்டணியோடு மகத்தான வெற்றி பெறும்.
ஜல்லிக்கட்டுக்கு அனைத்து காளைகளும் தயாராகி இருக்கிறது அதில் ஒன்னும் மாற்றமில்லை ஆன்லைன் டோக்கன்களை வழங்கக்கூடாது என்று மீண்டும் கடந்தாண்டை போல வலியுறுத்துவோம். அதேபோல் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஜல்லிக்கட்டை நடத்தாமல் இருக்க கூடாது. அதிமுக ஆட்சி காலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்தபோது விராலிமலையில் போட்டி நடத்தப்பட்டது. அதனால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்காமல் எளிமையாக நடத்த வேண்டும்.
தேர்தல் களம் என்று வந்துவிட்டால் அதிமுக களத்தில் இருக்கும்போது யாரெல்லாம் நிற்கிறார்களோ யாராக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவிப்பார்கள் நாங்கள் 2026 இல் ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.1020 கோடி ஊழல்... கே. என். நேருவை விடாதீங்க... அதிமுக லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு...!