×
 

ஓபிஎஸ்+கே.ஏ.எஸ்+டிடிவி இணைவால் ஆடிப்போன எடப்பாடி...நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முக்கிய புள்ளிகள் திடீர் ஆலோசனை...!

அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் ஆலோசனை

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில் அவரை கட்சி பதவிகளில் இருந்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காரில் ஒன்றாக பயணித்தார்.  இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரையில் இருந்து பசும்பொன் செல்லும் ஓபிஎஸ் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணிக்கிறார்கள் செல்லும் வழியில் டிடிவி தினகரனும்  தனி காரில் பயணித்து வருகிறார்கள் என்ற போதே மூவரும் ஒன்றாக இணைய உள்ளனர் என்ற தகவல் தீயாய் பரவியது.  பசும்பொன் அருகே ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சந்தித்தனர். பசும்பொன் செல்லும் வழியில் உள்ள நெடுங்குளம் என்ற இடத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் ஓபிஎஸ் வெளியேறிய நிலையில் அதிமுகவில் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஓபிஎஸ் உடன் இணைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவிற்கு கவலையில்லை: 

இதனிடையே, இதையடுத்து பாஜக மாநில தலைவர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஆர் பி உதயகுமார் ஆகிய அனைவரும் சேர்ந்து பாஜக மாவட்ட அலுவலகத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் நேற்று பசும்பொன்னில்  ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் இணைந்து வந்தது குறித்தும் அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்கலாமா அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்கலாமா, கட்சி சார்பாக செங்கோட்டை மீது ஏதும் நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து விவாதித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: OPS+TTV+செங்கோட்டையன் சந்திப்பு… யாருக்கு எச்சரிக்கை?... பரபரக்கும் அரசியல் களம்…!

அரை மணி நேரத்திற்கு பிறகு ஆலோசனைக் கூட்டம் முடிந்து மூவரும் வெளியே வந்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமண விழா குறித்து நேரடியாக பாஜக மாநில தலைவர் சந்தித்து அழைப்பு விடுத்தோம். டிடிவி தினகரன் ஓபிஎஸ் செங்கோட்டையன் ஆகிய மூன்று பேரும் சந்தித்தது அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் மூன்று பேரும் சந்தித்தது ஒரு நாள் பரபரப்பு அவ்வளவுதான் என்று கூறினார்.

நயினாருடன் ஆலோசனை:

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு நேற்று மரியாதை செலுத்துவதற்காக டிடிவி தினகரன் ஓபிஎஸ் செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே காரில் வந்து மரியாதை செலுத்தி விட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. இதை அடுத்து இன்று நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தி கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில் திடீரென அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜு இருவரும் அலுவலகத்திற்கு வந்து அவருடன் சேர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதை எடுத்து பாஜக மாநில தலைவர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஆர் பி உதயகுமார் ஆகிய அனைவரும் சேர்ந்து பாஜக மாவட்ட அலுவலகத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனையில் நேற்று பசும்பொன்னில்  ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் இணைந்து வந்தது குறித்தும் அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்கலாமா அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்கலாமா, கட்சி சார்பாக செங்கோட்டை மீது ஏதும் நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து விவாதித்தனர். 

இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அரை மணி நேரத்திற்கு பிறகு ஆலோசனைக் கூட்டம் முடிந்து மூவரும் வெளியே வந்தனர். டிடிவி, ஆர்பி, உதயகுமார் செங்கோட்டையன் சந்திப்பு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் மூன்று பேரும் சந்தித்தது ஒரு நாள் பரபரப்பு அவ்வளவுதான் என்று கூறினார்.
 

இதையும் படிங்க: அரசியல் களமாக மாறிய பசும்பொன்... ஓபிஎஸ்-செங்கோட்டையன் பயணம்! இபிஎஸ் தடாலடி பதில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share