×
 

பெண்களுக்கு பாதுகாப்பில்லை... திமுக அரசை கிழித்து தொங்க விட்ட நடிகை கெளதமி...!

சினிமா துறையானாலும் ,  அரசியல் துறையானாலும்  மக்களால் தான் நாம் இங்கு நிற்கிறோம் , எனவே  மக்களை நேரடியாக சென்று சந்திக்க வேண்டும் என சேலத்தில் நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.

சேலம் தெற்கு தொகுதி ,  அதிமுக வேட்பாளர் வினோத்-தை ஆதரித்து  நடிகை கௌதமி அம்மாப்பேட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோத்-தை ஆதரித்து அதிமுக  கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் நடிகையுமான கௌதமி , அம்மாபேட்டை பகுதியில் ராமலிங்க சவுண்டம்மன் கோயில் தெரு, வித்யா நகர்,  மாணிக்கவாசகர் தெரு , குண்டு பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது  கௌதமி பேசிய போது ,  தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ் ,  ரவிச்சந்திரன்  என ஜாம்பவான்கள் ஒருங்கிணைந்து தற்போது போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு ஒன்றிணைந்து முயற்சி எடுப்பது என்பது அதிமுகவில் மட்டும் தான், இந்த ஒற்றுமையை பார்க்க முடியும். இன்னும் ஐந்து நாட்கள் தான் உள்ளது , அடுத்த  ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்.  தமிழ்நாட்டையும் உங்களுடைய குடும்பங்களையும்  வழி நடத்தப் போகிற முதல்வரை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு இங்கு  பாதுகாப்பு இல்லை ,  விலைவாசி உயர்வு, 300 சதவீத வரி உயர்வு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை , அந்த இளைஞர்களுக்கு ஒரு கையில் கஞ்சாவும் மறுகையில் பல போதை பொருட்களும் கொடுத்து இருக்கிறார்கள் .  

இதுதான் ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளாக உள்ளது. இந்த மக்கள் விரோத ஆட்சியை மீண்டும் தலை நிமிரக்கூடாது.  இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக  கொண்டு வர வேண்டும். திமுக கூட்டணி கட்சிகள் எந்த வாக்குறுதிகள் கொடுத்தாலும் நம்பத்  தேவையில்லை. காரணம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்டாலின் கொடுத்த 525 வாக்குறுதிகள் எல்லாமே பொய் என்பது ,  அவருடைய செயல்களில் நிரூபித்திருக்கிறார்கள் எனவே அவர்களுடைய பேச்சை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.  மக்களுக்காக செயல்படக்கூடிய அதிமுக ஆட்சியை அமைய வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கௌதமி, கிராமங்கள் முதல் எல்லா இடத்திலும் நல்ல எழுச்சியை பார்க்க முடிகிறது. சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் 100% அதிமுக வெற்றி பெறும். தொகுதி மறுசீரமைப்பு தோல்வியடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளது , விவரமாக பேச வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லை என்றார். தொடர்ந்து விஜய் பிரச்சாரம் ரத்து செய்வது குறித்து கேள்விக்கு பதில் அளித்த கௌதமி, சினிமா துறையாகட்டும் அரசியல் துறையாகட்டும் மக்களால் தான் நாம் இங்கு நிற்கிறோம்.  மக்களை நேரடியாக சென்று சந்திப்பது தான் சரியாக இருக்கும் என்றார். அதிமுகவின் திட்டங்களை பொறுத்தவரை எதையும் இலவசமாக கருதக்கூடியது இல்லை. மக்கள் கஷ்டமான நேரத்தில் இருந்து அதை கடந்து செல்வதற்கான திட்டங்களை தான் ஜெயலலிதா கொடுத்திருக்கிறார்கள். அதன்படி தான்  மக்களின் தேவையை அறிந்து கொடுக்கப்பட்ட திட்டங்களை தான் கொடுத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்..

இதையும் படிங்க: மகளிர் இட ஒதுக்கீடு..! திமுகவின் தனிநபர் மசோதா..! மக்களவையில் நோட்டீஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share