×
 

இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி சிக்கல்... ரூ.2,000 கோடி ஊழலை தோண்டி எடுக்க ஆரம்பித்த லஞ்ச ஒழிப்புத்துறை...! 

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை முறைக்கேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

கடந்த 2019ஆம் ஆண்டு சட்ட பேரவையில் ஆதிமுக ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 2000 கோடி ரூபாய் அளவிற்கான நெடுஞ்சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் கோவை, தஞ்சாவூர், முக்கடம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிற்கு சாலைகளை புனரமைப்பது தொடர்பான ஒப்பந்த பணிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.  இது தொடர்பாக டெண்டர்களும் விடப்பட்டு அதில் பல்வேறு நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை ஒரு விரிவான விசாரணை ஒன்றை கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தியது. 

அதில் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து தற்போது ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அப்போது இருந்த தஞ்சாவூரை சேர்ந்த செயற்பொறியாளர் ஜெகதீஷன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இவர் தகுதியே இல்லாத ஒரு நிறுவனத்திற்கு அனுபவ சான்றிதழ் வழங்கி அதன் மூலம் இந்த ஒப்பந்த பணிகள் பெறுவதற்கான உடந்தையாக இருந்ததாக தெரிய வந்திருக்கிறது. இதில் மூன்று நிறுவனங்கள் மீதும் வழக்கு என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்கள் தான் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிற்கான நெடுஞ்சாலை தொடர்பான ஒப்பந்த பணிகளை பெற்றிருக்கிறார்கள். அதில் முக்கியமாக கேசிபி இன்ஜினியரிங் நிறுவனமானது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடையது எனக்கூறப்படுகிறது. 

இந்த நிறுவனம் ஏற்கனவே சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஒப்பந்த ஊழலில் தொடர்பு கொண்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ஆர்ஆர் இன்ஃப்ரா மற்றும் எஸ்பி ஆகிய அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்தே இந்நிறுவனங்கள் டெண்டர் முறைகேட்டிலும் ஈடுபட்டிருக்கலாம் என லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. 

இதையும் படிங்க: பொய் பேசாதீங்க EPS... அதிமுக ஆட்சியில் 600 மூட்டைகள் தான் கொள்முதல் பண்ணாங்க... MRK பன்னீர் செல்வம் பாய்ச்சல்...!

 தற்போது இந்த மூன்று நிறுவனங்களும் அதிமுக ஆட்சி காலகட்டத்தில் இந்த 2000 கோடி ரூபாய் நெடுஞ்சாலை ஒப்பந்தத்தைப் பெற்று, முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு நிறுவனமும் எவ்வளவு இழப்பீட்டை ஏற்படுத்தி இருக்கிறது குறித்த விரிவான அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் படிங்க: மனசாட்சியை தூக்கி எறிந்து விட்டு பச்சை பொய்... திமுகவுக்கு மன்னிப்பே கிடையாது! அதிமுக கண்டனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share