இந்த அவமானம் தேவையா?... எடப்பாடியை அசிங்கப்படுத்திய பெண் மாவட்ட செயலாளர்...!
இரத்ததானம் செய்வது போல் நடிக்கும் அதிமுக மாவட்ட செயலாளரின் போலித்தனம் குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நிலையில் அதிமுகவினர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. இரத்ததான முகாம், மருத்துவ முகாம் நடத்துவது என்று நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிறந்த நாளை ஒட்டு திருவண்ணாமலையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இரத்ததான முகாமை தொடங்கி வைத்த திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா இரத்ததானம் செய்வது போல நடித்துள்ளார். கையில் ரத்தம் தானம் செய்வதற்கான எந்தவித மருத்துவ உபகரணமும் பொருத்தப்படாமல், ரத்தனம் செய்வது போல வெறும் கையை மட்டும் காட்டி அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதா படுத்திருப்பது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: நீடூழி வாழுங்கள் அண்ணா! எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முக்கிய புள்ளி..!
சம்பந்தப்பட்ட வீடியோ சர்ச்சை ஆனதை அடுத்து, எனக்க்கு சுகர் இருக்குன்னு சொன்னனே. அதனால பிளட் எடுக்கல. கட்சிக்காரங்க ஒரு ஆர்வத்துல போட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவ்வளவுதானே தவிர, வேற ஒன்னும் இல்லை. இதுல என்ன சர்ச்சைன்னு எனக்குத் தெரியல” என விளக்கமளித்துள்ளார். எது எப்படியோ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை அவரது சொந்த கட்சிக்காரர்களே கேலி கூத்தாக்கி வருகின்றனர் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் ஏற்படும்.. திமுகவினர் பேச்சை கேட்கும் போலீஸாருக்கு தண்டனை.. செல்லூர் ராஜூ எச்சரிக்கை!