எடப்பாடியின் பிபி-யை எகிற வைத்த அதிமுக உண்மை விசுவாசிகள்... செங்கோட்டையனுக்கு கிடுகிடுவென உயரும் மவுசு...!
சிவகங்கையில் பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைத்து 2026 தேர்தலில் வெற்றி பெறச் செய்ய சபதமேற்றிற்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.
“அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டு, வெளியில் சென்றவர்கள், தற்போது எந்த நிபந்தனையும் இல்லாமல், இணையத் தயாராக உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு, வெளியில் சென்றவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சியை 10 நாளில் எடுக்க வேண்டும். கட்சித் தலைமை இதனைச் செய்யவில்லை என்றால், இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, அதற்கான பணிகளை மேற்கொள்வோம். ஒருங்கிணைப்பு தொடர்பான கோரிக்கைக்கு முடிவு வந்தால்தான், பொதுச் செயலாளர் பழனிசாமி நடத்தும் பிரச்சார பயணத்தில் நான் கலந்து கொள்வேன்” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து சிவகங்கையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் பிரிந்து கிடக்கும் கழகத்தை ஒன்றிணைத்து, வரும் 2026-ல் நடைபெறும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, அவர்களின் பொற்கால ஆட்சி அமைய வேண்டுமென்று சபதமேற்றிற்கும் சட்டமன்ற உறுப்பினர். முன்னாள் அமைச்சர் K.A.செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை கடந்த சில ஆண்டுகளாக கழகத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வரும் அதிமுக உண்மை விசுவாசிகள் என்ற பெயரில் போஸ்டர் யுத்தம் நடத்தி வரும் பலர் இதை அச்சடித்து ஒட்டி உள்ளனர்
இதையும் படிங்க: கெடு விதித்த K.A.S... இப்ப என்ன பண்ணலாம்? EPS தீவிர ஆலோசனை!
இதையும் படிங்க: ப்ளீஸ் போகாதீங்க... எடப்பாடிக்கு இப்படியொரு நிலையா?... கெஞ்சி கூத்தாடிய அதிமுகவினர்...!