×
 

அதிமுகவில் தொடருகிறீர்களா?... முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கொடுத்த எதிர்பாராத ரியாக்‌ஷன்...!

அதிமுகவில் தொடர்வதா இல்லையா என்பது குறித்து விஜயபாஸ்கர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நேற்று இரவு சென்னை சென்றுவிட்டு வந்தீர்கள். ஆனால் தலைமையை சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு, ‘ரிசப்ஷன் நிகழ்ச்சி இருந்தது. நல்ல முகூர்த்த நாள் என்பதால் நான் எப்போதும் தொகுதியில்தான் இருப்பேன். நேற்றும் திருமண நிகழ்ச்சிகள் இருந்தன. இன்றும் சுமார் 40 திருமண நிகழ்ச்சிகள் உள்ளன. எனக்கு தொகுதி மக்கள் முக்கியம். எந்த சூழலிலும் தொகுதி நிகழ்ச்சிகளை நான் தவறவிட மாட்டேன்.

வேறு கட்சிக்கு செல்லப் போகிறீர்களா என்ற கேள்விக்கு, ‘அதை நான் ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டேன். திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்வது எனக்கு முக்கியம். அழைப்பிதழ் கொடுத்தவர்களின் திருமணத்தில் நான் கண்டிப்பாக கலந்துகொள்வேன். என் தொகுதியே என் முன்னுரிமை’ என்றார்.

‘நான் அதிமுகவில்தான் இருக்கிறேன், அதில்தான் தொடர்வேன் என்று உறுதியாகச் சொல்லவில்லையே?’ என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் அளிக்காமல் தவிர்த்தார். இதனால், அதிமுகவில் தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து இன்று சி. விஜயபாஸ்கர் அறிவிக்கக்கூடும் என்ற அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கை நழுவிய 15 வருட செண்டிமெண்ட்... காலியான எடப்பாடி பழனிசாமி... விடிந்ததுமே நடந்த அதிரடி மாற்றம்...!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராகவும், புதுக்கோட்டையில் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருக்கும் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், கட்சித் தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும், கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி எடுக்கவில்லை என்பது அவரது முக்கிய குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.

இதனால், தோல்விக்கான காரணங்களை ஆராய மாவட்ட செயலாளர்கள் கூட்டமோ அல்லது பொதுக்குழுவோ கூட்டப்பட வேண்டும் என்று சில நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் தற்போது எடப்பாடி பழனிசாமி அணிக்குச் சென்றுவிட்டனர். சி. விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் மட்டும் தனித்த நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சி. விஜயபாஸ்கர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், ‘அரசியலில் இருந்து விலகலாமா? இவ்வளவு அவமானங்களுக்குப் பிறகும் அதிமுகவிலேயே தொடரலாமா? அல்லது வேறு கட்சிக்கு செல்லலாமா?’ என்று மூன்று விருப்பங்களை முன்வைத்து கருத்து கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர், ‘இதற்கு மேல் அதிமுகவில் தொடர்வதில் பயன் இல்லை. கட்சியில் இருந்து விலகலாம்’ என்ற கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்து,அதிமுகவில் இருந்து விலகும் முடிவை அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது

இதையும் படிங்க: அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share