மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!
கூட்டணி கட்சிகளை நம்பினால் தேர்தலில் வெற்றி பெற முடியாது மரக்காணம் ஆலோசனை கூட்டத்தில் சிவி சண்முகம் பேச்சு
வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி மரக்காணம் நகர அதிமுக சார்பில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் மரக்காணம் திரௌபதி அம்மன் கோயில் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டு இருந்தது. இதனால் காலையிலேயே சம்பவ இடத்திற்கு நிர்வாகிகள் வந்துவிட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இந்த கூட்டத்திற்கு 11.30 மணிக்கு மேல் வந்தார். இதன் காரணமாக நிர்வாகிகள் வெயிலில் காத்துக் கிடக்கும் நிலை இருந்தது.
இந்த கூட்டத்திற்கு தேர்தல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்க சிவி சண்முகம் வந்தவுடன் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை எந்த நிறுவனம் போட்டோவோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என மிரட்டல் விடும் தூணியில் கூறினார். அப்போது அங்கு அவர்களது கட்சியின் நிர்வாகிகளே சிலர் நிகழ்ச்சியை போட்டோ எடுத்தனர். இதனைப் பார்த்த சிவி சண்முகம் அவர்களை இங்கு போட்டோ எடுக்க கூடாது என கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து அவரது கட்சி நிர்வாகிகளும் இங்கு யாரும் போட்டோ எடுக்கக்கூடாது என மிரட்டல் தோணியில் பேசினர்.
இதன் காரணமாக அங்கு யாரும் போட்டோவோ, வீடியோவோ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவி சண்முகம் நிர்வாகிகளிடம் ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூட்டணி கட்சிகளை நம்பியே இருந்தாl நாம் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. இதனால் பொதுமக்களிடம் சென்று தினந்தோறும் வாக்கு சேகரிக்க வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த உச்சக்கட்ட மோதல்... சி.வி.சண்முகத்திற்கு பகிரங்க எதிர்ப்பு... நகர செயலாளர் போர்க்கொடி...!
கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி வெற்றி பெற முடியாது எனக் கூறிய பொழுது அங்கிருந்த கூட்டணி கட்சியினர் செய்வதறியாது ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து நின்றனர். இதனைத் தொடர்ந்து சில நிமிடங்கள் மட்டுமே ஆலோசனை வழங்கிய சிவி சண்முகம் கூட்டத்திற்கு சொற்ப அளவில் மட்டுமே நிர்வாகிகள் கலந்து கொண்டதால் கூட்டத்தை முடித்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.
இதையும் படிங்க: அரசியல் நாகரிகமோ, அறமோ அதிமுகவுக்கு இருந்ததே இல்ல... சி.வி. சண்முகத்தை வெளுத்த கனிமொழி..!!