#BREAKING மதுரையில் உச்சக்கட்ட பரபரப்பு...அதிமுக எம்.எல்.ஏ. அதிரடி கைது... போலீசுடன் தகராறு...!
மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய மர்ப நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது அதிமுக எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதனை நேற்று முன்தினம் சமூகவிரதிகள் சிலையை சேதப்படுத்தியதை தொடர்ந்து மாற்று சிலை வைக்க காவல்துறையை அனுமதி அளித்தனர். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் பகுதி செயலாளர்ஜெயகல்யாணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் எம்ஜிஆர் சிலை முன்பு கூடினர். அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தி, காவல் துறை அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தியில் தோல்வி ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் அவனியாபுரம் விமான நிலைய சாலை நோக்கி சென்று மறியலில் ஈடுபட்டனர். காவல் உதவியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது சமரசம் ஏற்படாததைத் தொடர்ந்து அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனையடுத்து போலீசார் எம்எல்ஏ உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்தனர்.
அவனியாபுரம் எம்ஜிஆர் சிலை சேதம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ திடீர் சாலை மறியல் தடையை மீறி சாலை மறியல் செய்ததால் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் கைதான எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை அருகில் உள்ள தனியார் மகாலில்
தங்க வைத்தனர்.
இதையும் படிங்க: நம்பியவர்களை அனாதையாக்கியவர் TTV தினகரன்... ஆர்.பி உதயகுமார் பதிலடி...!
எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கைது செய்யப்பட்டதும் அவருடைய ஆதரவாளர்கள் போலீஸ் வானத்தில் முன் சென்று வாகனத்தை எடுக்க விடாமல் போலீசருடன் தகராறு செய்தனர் . இதனை தொடர்ந்து காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன்.ஆய்வாளர் லிங்க பாண்டியுடன்அதிமுக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் தகராறு செய்தனர். அதனை தொடர்ந்து ஒரு வழியாக எம்எல்ஏ உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் மண்டபத்தில் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகி கல்யாண சுந்தரத்தின் கார் கவிழ்ந்து விபத்து... போலீஸ் விசாரணை...!