×
 

“அதை போய் செங்கோட்டையன் கிட்ட கேளுங்க”... செய்தியாளர்களிடம் டென்ஷனின் உச்சத்திற்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏ...!

அதிமுக கூட்டத்திற்கு செங்கோட்டையன் அழைக்கப்படாதது ஏன்? என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் கடிந்து கொண்ட மேட்டுப்பாளையம் அதிமுக எம் எல் ஏ செல்வராஜ்

செங்கோட்டையனுக்கு பதிலாக, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் எம்எல்ஏ, ஏ.கே.செல்வராஜ் கோபிசெட்டிபாளையம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். 

அப்போது செய்தியாளர்கள் அவரை சந்தித்து கேள்விகளை எழுப்பினர். இதனால் ஆவேசமடைந்த அவர்,  செய்தியாளர்களை சந்திக்க வரவில்லை கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக வந்துள்ளேன். அடுத்த கட்டமாக கட்சியில் எப்படி வேலை செய்வது என்பதற்கு ஆலோசனை நடத்துகிறோம் என ஆவேசமாக பதிலளித்தார். 

மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின் நிர்வாகிகளை சந்திப்பது என் கடமை அதன் அடிப்படையில் சந்திக்க வந்துள்ளேன்.  செங்கோட்டையன் தனியாக சில நிர்வாகிகளை பிடித்து வைத்திருப்பதாகவும் சிலருடன் அவர் ஆலோசனை செய்வதாகவும் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, இது பற்றி எனக்கு தெரியாது என்றார் 

இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்... A.K. செல்வராஜ் கட்சி நிர்வாகிகளோடு திடீர் ஆலோசனை...!

செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டபோது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்தார்களே?. அந்த கடிதம் வந்து சேர்ந்ததா.? என்ற கேள்விக்கு அந்த கடிதம் அவர் யாரிடம் கொடுத்தார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்களா அல்லது யார் மூலம் யாருக்கு அனுப்பி வைத்தார்கள் என்ற விபரத்தை செங்கோட்டையனிடம் தான் கேட்க வேண்டும்.

 கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ செங்கோட்டையனை ஆலோசனை கூட்டத்திற்கு அழைக்காதது ஏன் .?, அவரால் தான் இந்த பிரச்சனையே வந்துள்ளது. அவர் தற்பொழுது அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார்.இது நிர்வாகிகளுக்கான கூட்டம். அவரை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

பத்திரிகையாளர்கள் தான் அவரைக் கெடுத்தீர்கள் தற்பொழுதும் கேள்விகளைக் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். நாங்கள் கட்சிப் பணியை சிறப்பாக செய்து வருகிறோம் அதிக நிர்வாகிகள் வரவில்லை என்று யூகமாக கேள்வியை கேட்காதீர்கள். கட்சிக்காரர்கள் சொல்வதை கேட்காதீர்கள். பத்திரிகையாளர்கள் தவறு செய்யாதீர்கள். எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கக் கூடாது?, கேள்வி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்?. நிர்வாகிகள் வரவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? செங்கோட்டையன் சில நிர்வாகிகளை பிடித்து வைத்துக் கொண்டதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு அது பற்றி எனக்கு தெரியாது என்றார்.

 எடப்பாடி யாரை இதயத்தில் வைத்துள்ளோம் போதுமா?, எந்த கேள்வி கேட்டாலும் கவலைப்பட மாட்டோம். எப்போதும் எடப்பாடிக்கு உறுதுணையாக இருப்போம். நல்ல காரியம் நடத்துகிறோம். தயவு செய்து குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம். தேவையில்லாமல் கேள்விகளை கேட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். என்ன நிகழ்ச்சி நடக்கிறது என்பதை பாருங்கள் கேள்வி என்னவென்றாலும் கேட்கலாம். நான் உங்களை கேள்வி கேட்கட்டுமா பதில் சொல்வீர்களா? உள் அரங்க கூட்டம் நடத்துகிறோம் நீங்கள் உங்கள் வழியை பாருங்கள் நாங்கள்  எங்கள் வேலையை பார்க்கிறோம்... என கடிந்து கொண்டார்.

இதையும் படிங்க: செல்லாக்காசு! யாரை சொல்றாரு இவரு? ஆர்.பி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share