×
 

அதெல்லாம் வாய்ப்பே இல்ல... ஓபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ் விசுவாசி...!

டிடிவி ஓபிஎஸ் உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது , பாஜகவுடன் கூட்டணி வெற்றிகரமாக செல்கிறது  என நத்தம் விஸ்வநாதன்  கொடைக்கானலில் தெரிவித்தார். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொடைக்கானல் நகர ஆஇஅதிமுக சார்பாக கடந்த சில நாட்களாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதிமுகவில் புதிதாக விளையாட்டு வீரர்கள் அணி உருவாக்கப்பட்டதில் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே கொடைக்கானல் மூஞ்சிகள் மைதானத்தில் அதிமுக விளையாட்டு வீரர்கள் அணி சார்பாக கால்பந்து , கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

 எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் , அதிமுகவின் துணை பொது செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் பங்கேற்றார் கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்று வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: மாமன்ற கூட்டமா? திமுக கூட்டமா? - கொதித்தெழுந்த அதிமுக கவுன்சிலர்...! 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன் ராணுவ வீரர்கள் குறித்து யார் பேசியிருந்தாலும் அது தவறுதான் செல்லூர் ராஜு அவர்களை பாராட்டுவதாக நினைத்து பேசி விட்டார். ராணுவ வீரர்களுக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் எனவும் பாஜகவுடன் கூட்டணி வெற்றிகரமாக செல்கிறது எனவும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் இணைப்பு என்பதற்கு பேச்சு இனி கிடையாது என காட்டமாக தெரிவித்தனர் தமிழ் விஸ்வநாதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் கூட்டணி குறித்து அவரே அறிவிப்பார் எனவும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.


மேலும் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று மழை குறுக்கிட்டதால் அங்கு இருந்த மக்கள் மற்றும் வீரர்கள் உடனடியாக சேர்களை விட்டு எழுந்துச் சென்றனர். 

இதையும் படிங்க: அவரு எடுபுடி கோழைச்சாமி.. கோடநாடுன்னு சொன்னாலே தொடை நடுங்குதே! பந்தாடிய அமைச்சர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share