×
 

பேனரில் பெரியார் படம் அகற்றம்... மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆவேசம்...

எங்களுடைய குலதெய்வம் தந்தை பெரியார். இதற்கு மாற்றாக யார் என்ன கருத்து சொன்னாலும் அதை வாக்காளர் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்

காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து அதிமுக அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் - என்டிஏ கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு அதிமுக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.சிவசாமி ஏற்பாட்டில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக கூட்டணி பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது முன்னாள் அமைச்சரும் அதிமுக அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற செயலாளருமான பொன்னையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் இன்று சிறப்பு ஊக்கத்தொகை 2000 வழங்கியது சம்பந்தமான கேள்விக்கு, சற்று பொறுத்திருந்து பாருங்கள் அண்ணா திமுக மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் என்ன செய்யப் போகிறது, எடப்பாடியார் என்ன செய்யப் போகிறார் என்ற ஆச்சரியத்தை சற்று பொறுத்து இருந்து பாருங்கள். நீங்கள் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள்.

இதையும் படிங்க: தஞ்சையில் நாளை விஜய்! செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு!

ஓபிஎஸ் திமுக-வில் இணைந்தது குறித்த கேள்விக்கு, அவரது தாய்க்கழகத்திற்கே திரும்ப சென்று விட்டார். அவர் ஆரம்பத்தில் இருந்தே திமுக காரர் தான். அவங்க அப்பாவை கும்பிட்டு தான் அரசியலை செய்வார். அவங்க அப்பா கருணாநிதி படத்தை பூஜை ரூமில் வைத்து கும்பிட்டு தான் வீட்டில் எல்லா வேலையையும் செய்வார். இத சட்டப்பேரவிலேயே கருணாநிதி பட திறப்பு விழாவில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் உள்ளம் எல்லாம் பக்தமெல்லாம் உடலெல்லாம் இருக்கக்கூடிய ஒரே சக்தி கருணாநிதி என்ற தெய்வ சக்தி. அவர் எந்த சூழ்நிலையிலும் திமுக காரர் தான், பெரிய தந்தரசாலி, துரோகி அப்படிப்பட்ட தந்திரத்தையும் துரோகத்தையும் வைத்துக் கொண்டுதான் தினகரன் வயிற்றில் அடித்த தினகரனை காலி செய்தார், சின்னம்மா வயித்தில் அடித்து சின்னம்மாவை காலி செய்தார், சின்னம்மா மூலம் அம்மவை ஏமாற்றி நல்லவராக பெயர் பெற்று அம்மாவே காலி செய்தார். அப்படிப்பட்ட சுயநலக்காரர் ஓபிஎஸ் திமுகக்காரர். ஓபிஎஸ்ஐ பற்றி கேள்வி கேட்பதில் அர்த்தமே இல்லை மக்கள் அவரை கடலில் தூக்கி எறிந்து விட்டார்கள். தென்மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் இரட்டை இலை வெல்லும். இபிஎஸ் அவர்கள் வெல்வார்கள். மறவர்கள் எல்லாம் அவருடன் வந்துவிட்டார்கள்.

இடைக்கால பட்ஜெட் குறித்த கேள்விக்கு, அதில் எவ்வளவு பொய் இருக்கிறது என்பது குறித்து தெளிவாக கூறிவிட்டார் எடப்பாடியார். மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பெரியார் படம் அகற்றப்பட்ட கேள்விக்கு. அதைப் பற்றி எடப்பாடி கருத்து சொல்லுவார். 

எங்களைப் பொருத்தவரைக்கும் எங்களுடைய குலதெய்வம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி இதுதான் அண்ணா திமுக தொண்டர்களின் குலதெய்வம் இதற்கு மாற்றாக யார் என்ன கருத்து சொன்னாலும் அதை வாக்காளர் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இதனை அவரவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை எங்களுடைய கருத்து எனக்கூறினார். 

இதையும் படிங்க: நெசவாளர்களுக்கு நியாயமான கூலி பெற்று தரப்படும்! ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் மேக்வால் உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share