அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்ட நிலையில் அம்பையில் இசக்கி சுப்பையாவுக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் ஆதிமுகா சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்ட நிலையில் அம்பையில் இசக்கி சுப்பையாவுக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற இச்சக்கி சுப்பையா கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனால் இசக்கி சுப்பையா மீது அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுகவினர் மட்டுமின்றி அவருக்கு வாக்களித்த மக்களும் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
குறிப்பாக அவர் அவருக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களை அவர்களது எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இசக்கி சுப்பையாவுக்கு எதிராக அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினர் சார்பாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டது. தொடர்ந்து தேர்தலை ஒட்டி எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில் இசக்கி சுப்பையாவின் பெயர்களை மட்டும் அதிமுகவினர் அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? என்ன நடந்துச்சு.? தவெக, தேர்தல் ஆணையத்துக்கு பறந்த உத்தரவு..!!
அதன்படி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுகவினர் சிலர் சுவர்களில் எழுதி எழுதப்பட்டிருந்த அம்மா என்ற எழுத்தை தொட்டு கும்பிட்டு இசக்கி சுப்பையாவின் பெயரை பேண்டால் அளித்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதாங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து இதேபோல் அம்பா சமுத்திரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தாவரைக்காவில் இணைந்துள்ள இசக்கி சுப்பையாவுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் வந்து வந்த வண்ணமாகவே உள்ளது.
அதிகபட்சமாக சமூக வலைதளங்களில் வந்து இந்த தேர்தலில் எவ்வளவு செலவுகள் ஆகி இருக்கிறது. திடீரென அதாவது ஏற்கனவே கடந்த முறை இசைக்கு சுப்பையை அதிமுக சார்பாக போட்டியிட்டு அம்பாசம் தொகுதியில் ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏ வாக இருந்தார் தற்போது மீண்டும் இந்த தொகுதி மக்கள் வெற்றி பெற செய்தும் இவ்வாறு ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து கொண்டார் என பல்வேறு கருத்துக்களை வந்து சமூக வலைதளங்களில் பதிவியிட்டு அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "இது ஒன்னும் லாட்டரி வியாபாரம் இல்ல"..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுக பதிலடி..!!