Safety- ஐ விட TIDEL PARK முக்கியமா? திமுக அரசுக்கு கண்டனம்… அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!
திமுக அரசை கண்டித்து ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில், இராசிபுரம் பகுதியில் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TIDEL Park அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அதிமுக அறிவித்து உள்ளது. திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு என விமர்சித்து உள்ளது.
தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக்கூட பல்வேறு வகைகளில் சிரமப்பட வேண்டிய அவல நிலை ஏற்படுவது வழக்கமான ஒன்று என்றும் இச்செயல், வாக்களித்த மக்களுக்கு திமுக செய்து வரும் மாபெரும் துரோகம் எனவும் தெரிவித்துள்ளது
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி, இராசிபுரம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு TIDEL Park அமைக்க உள்ளது என குறிப்பிட்டுள்ளது. அந்த இடத்தில் TIDEL Park அமைக்கப்பட்டால் மாணவ, மாணவியர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என அப்பகுதி மக்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளூர் உற்பத்தியை கண்டுக்காம வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வராராம்! என்ன பயன்? முதல்வரை விளாசிய நயினார்…!
எனவே, இராசிபுரம் பகுதியில் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TIDEL Park அமைக்க இருக்கும் மு க அரசை கண்டித்தும், இந்தத் திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் 17ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் ஆண்டகலூர் கேட், திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில், அதிமுக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடித்து நொறுக்கும் மழை... போகாதீங்க மக்களே... ஆகாய கங்கையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...!