×
 

"எடப்பாடி முதலமைச்சர் ஆகவே நான் தான் காரணம்"... ரகசியத்தை போட்டுடைத்த செங்கோட்டையன்...!

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக தான் காரணம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

கோபிச்செட்டிபாளையத்தில்  அதிமுக முன்னாள் அமைசசர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 1972ல் புரட்சி தலைவர் அவருடைய புனித பயணத்தில் அன்று உறுப்பினராக இருந்து பணியாற்றியவன் புரட்சி தலைவரோடு என் பயணத்தை மேற்கொள்கிற போது 1975ல் கோவையில் நடைபெற்ற முதல் பொதுக்குழுவில அரங்கநாயகம், மணிமாறன், எனக்கும் அந்த வாய்ப்பை புரட்சித்தலைவர் வழங்கினார். முழுமையாக அந்த பொதுக்குழுவை சிறப்பான முறையில் நாங்கள் ஆற்றி பணிகளைப் பார்த்து புரட்சி தலைவரே எங்களை பாராட்டினார். இமயமே தன் தலையில் விழுகிறது என்றாலும் சருக்காமல் வழுக்காமல் இந்த இயக்கத்திற்கு விசுவாசம்உள்ள தொண்டனாக இருக்கின்ற காரணத்தின் அடிப்படையிலே தான் இத்தனை பொறுப்புகளை நான் அவருக்கு வழங்கி இருக்கிறேன் என்று அம்மா குறிப்பிட்டதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். 

 

ஆகவே புரட்சி தலைவர் காலத்திலும் சரி, புரட்சி தலைவி அம்மா காலத்திலும் சரி இந்த இயக்கம் வலிமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரோடும் சேர்ந்து என்னுடைய பணிகளை அயராமல் நான் ஆற்றி இருக்கிறேன். ஆகவே அப்படி பணியாற்றிய பிறகு வாய்ப்புகள் கிடைக்கின்ற போது கூட அந்த வாய்ப்பை நான் இந்த இயக்கம் ஒரு சிறிதளவு கூட ஏதாவது தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தோடு தான் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்திருக்கிறேன்.

இதையும் படிங்க: கட்சியை விட்டு தூக்கிய இபிஎஸ்... இரவோடு இரவாக செங்கோட்டையன் செய்த தரமான சம்பவம் - ஷாக்கில் அதிமுக...!

 

 அப்படிப்பட்ட நிலையில் இன்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் நம்முடைய பணிகளை நாங்கள் ஆற்றிக் கொண்டிருக்கிற நேரத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதற்கு பிறகு 2019 முதல் அவர் எடுத்த தவறான முடிவுகளே அதிமுக தோல்விகளை தழுவ காரணமாக அமைந்தது. அதை நாம் கண் கூடாக பார்த்திருக்கிறோம்.

 

ஆனால் எம்.ஜி.ஆருடைய வாழ்க்கை வரலாற்றை பார்க்கின்ற போது தோல்வி என்பதே அவர் வரலாற்றில் இல்லை என்ற வரலாறு படைத்தவர். ஜெயலலிதா ஒருமுறை தோல்வி ஏற்பட்டால் மறுமுறை வெற்றி என்ற இலக்கை சரித்திரம் காணுகின்ற அளவிற்கு உறுதி கொண்டவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை வழிநடத்துவதற்காக சசிகலா எல்லோரையும் அழைத்துப் பேசி, எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டப் பிறகு, என்னிடத்தில் அதற்காக ஒரு மணி நேரம் பேசினார். அப்போது நான் சொன்னது ஒரே கருத்துதான் எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். நம்மிடம் இருப்பது 122 பேர் தான் 11 பேர்கள் வெளியே இருக்கிறார்கள். அந்த நிலை மாறிவிடக்கூடாது. ஒரு சிறிய அளவு கூட சேர்ந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு அன்று இவருக்காக பரிந்துரை கடிதத்தை எல்லோரிடத்திலும் ஒப்புதல் பெற்று பத்திரிக்கையாளருக்கு படித்தவன் நான்.

இதையும் படிங்க: #BREAKING: கட்சி கட்டுப்பாட்டை மீறிட்டாரு.. அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்..!! இபிஎஸ் அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share