×
 

#நாசமாய்போன_நான்காண்டு... ஸ்டாலின் ‘ஷாக்’, எடப்பாடி ‘ராக்’- தெறிக்கவிட்ட அதிமுக!

#நாசமாய்போன_நான்காண்டு, #ByeByeStalin போன்ற ஹேஷ்டேக்குகளை போட்டு திமுக ஆட்சியில் நடந்த பிரச்சனைகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

2021-ம் ஆண்டு மே மாதம் இதே நாளில், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.." என்ற சொல்லை உச்சரித்து, முதல்-அமைச்சர் அரியணை ஏறினார், மு.க.ஸ்டாலின். அந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனதுமேடை பேச்சுகளில் எல்லாம், திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் கடந்த 10 ஆண்டுகளில் சந்திக்காத சாதனைகளை படைத்து வருவதாகவும், முன்னோடி மாநிலமாக வளர்ந்துள்ளதாகவும் மார்த்தட்டி வருகிறார். 

தற்போது திமுக ஆட்சியில் 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5ம் ஆண்டிற்கு அடியெடுத்து வைக்கிறது. கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.  காலை உணவுத் திட்டம், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி  என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் சட்ட ஒழுங்கு விவகாரத்தில் திமுக ஆட்சி சரியில்லை என்ற பாயிண்ட்டை பிடித்து அதிமுகவினர் சோசியல் மீடியாக்களில் வச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

#நாசமாய்போன_நான்காண்டு, #ByeByeStalin போன்ற ஹேஷ்டேக்குகளை போட்டு திமுக ஆட்சியில் நடந்த பிரச்சனைகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 2021-ல் எப்பாடுபட்டாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டுமென நடைமுறைக்கு சற்றும் ஒத்து வராத, பொய்யென தெரிந்தும் துணிந்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் இன்றோடு தனது புலிகேசி தர்பாரில் நான்காண்டுகளை நிறைவு செய்கிறார் என விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கே இரண்டகம்..! திமுகவின் கொத்தடிமை ரகுபதி.. விளாசிய இபிஎஸ்..!

இந்த நான்காண்டுகளில் திமுக ஆட்சி materialstic ஆக செய்தது என்ன என்ற கேள்வியை எழுப்பினால் சம்மந்தமே இல்லாமல் அதிமுக-பாஜக கூட்டணியைப் பற்றி பேசி மடை மாற்றம் செய்கின்றனர் திமுகவின் கொத்தடிமை கூட்டமும் அதன் தொங்கு சதைகளான கூட்டணி கட்சிகளும் என்றும், கேஸ் மானியம், கல்விக்கடன் ரத்து, நீட் விலக்கு ரகசியம், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு, அனைத்து மகளிர்க்கும் 1000 ரூபாய் என சொன்ன எதையுமே செய்யாமல் நாடு போற்றும் நான்காண்டுகள் என தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ஸ்டாலின் என்றும் அதிமுக ஐ.டி.விங்க் திமுக உ.பி.க்களை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறது. 

எதையுமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. குறைந்தபட்சம் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து பொதுமக்களின் அமைதிக்காவது பங்கம் வராமல் பார்த்துக் கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. சல்லீசாக புழங்கும் கஞ்சா, நாற்றமெடுக்கும் வேங்கைவயல், ஆட்சியில் நடக்கும் கொள்ளைகளை தட்டிக் கேட்பவர்கள் தொடர்ந்து கொலை, கள்ளச்சாராய சாவுகள் என தமிழ்நாடு கண்டிராத மோசமான ஆட்சியை தந்துள்ளார் என ஸ்டாலினை சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்னும் 10 மாதங்களில் ஸ்டாலினின் விளம்பர ஆட்சிக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமைப்போம் என்றும் சூளுரைத்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: கைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்.. 4 தொகுதிகளை குறிவைத்து இறங்கும் எடப்பாடியார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share