“ஒட்டடையடிக்க உதவாத விளக்குமாறு...”, “இதுக்கு நாக்கை பிடுங்கி செத்திருக்கலாம்”... ஓபிஎஸை ஒருமையில் விளாசித் தள்ளிய விந்தியா....!
திமுக கைக்கூலிகள் யார் என இப்போது தெரியவந்திருக்கிறது.தமிழக மக்களுக்கு புரிந்திருக்கிறது. இவர்களை கட்சியில் வைத்திருந்தால் அதிமுக வேட்டியை கட்டிக்கொண்டு திமுகவிற்கு வேலை பார்த்து இருப்பார்கள்.
தமிழ்நாடு மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற
அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகை விந்தியா கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேடையில் நடிகை விந்தியா பேசியதாவது: எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் அப்போது தான் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடையும். இன்னொரு இழப்பை இந்த இயக்கம் தாங்காது அதனால்தான் எடப்பாடியார் துரோகிகளை கட்சியில் சேராமல் பார்த்துக் கொண்டார். அவர்கள் செய்தது சாதாரண துரோகமா? எத்தனை துரோகம் செய்து இருக்கிறார்கள். அந்த துரோகிகள் திமுகவிற்கு கைக்கூலியாக இருந்திருக்கிறார்கள் . இவர்களால் தான் அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது. அம்மாவின் சேரையும் உடைத்து சேதப்படுத்தினார்கள். பைல்களை தூக்கி சென்றார்கள். கட்சியை உடைக்க பார்த்தார்கள், முடக்க பார்த்தார்கள். திமுகவுடன் கைகோர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அண்ணன் எடப்பாடியார் கட்சியை காப்பாற்றி விட்டார். தமிழக மக்களுக்கு தெரியவேண்டும் என எடப்பாடியார் பொறுமையாக காத்துக்கொண்டிருந்திருக்கிறார். திமுக கைக்கூலிகள் யார் என இப்போது தெரியவந்திருக்கிறது.தமிழக மக்களுக்கு புரிந்திருக்கிறது. இவர்களை கட்சியில் வைத்திருந்தால் அதிமுக வேட்டியை கட்டிக்கொண்டு திமுகவிற்கு வேலை பார்த்து இருப்பார்கள்.
நாங்க ஒட்டடையடிக்கக்கூட உதாவது என ஒதுக்கிவைத்த விளக்குமாறை எல்லாம் வெட்டிவேர் என நினைத்து திமுகவும், ஸ்டாலினும் கழுத்தில் போட்டுகிட்டு சுத்துகிறார்கள். சேகர் பாபு சொல்கிறார், எதிரியோட பொருள் எடுத்து எதிரியை போடணும்னு. ஐயா திமுக பூச்சாண்டிங்களா நீங்க தூக்கிட்டு போயிருக்கிறது அதிமுக உடைய வெப்பன் இல்லை நாங்கள் வைத்த பபூன். நம்மளை விட்டு இருக்கிற சனி விலகி இருக்கிறது. பதவி ஆசை பதவி வெறி. இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இத்தனை துரோகிகளை உங்களது ஆதரவுடன் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: கன்ஃபார்ம்..!! அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும்... OPS திட்டவட்டம்..!!
ஓபிஎஸ் தாய்கலகத்தில் இணைந்து விட்டேன் எனக் கூறியிருக்கிறார். இந்த கட்சியில் 25 வருடத்திற்கு மேலாக இருக்கிறேன். நான் எந்த பதவியும் அனுபவிக்கவில்லை. ஆனால் ஓபிஎஸ் எத்தனையோ பதவிகளை அனுபவித்தார். அவரால் பதவிகள் ஏதும் இல்லாமல் தூங்க முடியாது. எத்தனையோ சலுகைகளை அனுபவித்த ஓபிஎஸ் திமுக முன்பு குனிந்து நிற்கிறார். உடம்பு கூசவில்லையா?. ஜெயலலிதாவின் போட்டோவை கழட்டி விட்டு ஸ்டாலின் போட்டோவை வைக்கிறார்.
இரட்டை இலை சின்னத்தை உடைத்து விட்டு உதயசூரியன் சின்னத்தை வைக்கிறார். அவர் இருக்கிற வீடு, அவர் வைத்திருக்கும் கார் எல்லாம் ஜெயலலிதா போட்ட பிச்சை. உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் தான். நீங்கள் இப்படி செய்ததற்கு நாக்கை பிடுங்கி செத்திருக்கலாம்.
அறிவாலயத்துக்கும் யார் சென்றாலும் இரண்டு சீட்டு வைத்துக் கொள்ளுங்கள். நான்கு சீட்டு வைத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார்கள். ஐந்தாண்டு நல்லாட்சி நடந்திருந்தால் ஸ்டாலினுக்கு ஏன் இந்த பிழைப்பு வருகிறது என சரமாரியாக ஓ.பன்னீர்செல்வத்தை சாடினார்.
இதையும் படிங்க: சட்டைப்பையில் ஜெயலலிதா படம்... விஜய் சொன்ன அந்த வார்த்தை... மனவேதனையில் செங்கோட்டையன்...!!