×
 

சுப்ரீம் கோர்ட் உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது… திமுக வழக்கறிஞர் வில்சன் பரபரப்பு பேட்டி…!

உச்ச நீதிமன்றத்தின் சிபிஐ விசாரணை உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்காது என திமுக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி கையெழுத்து வாங்கி வழக்கு தொடரப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி கையெழுத்து பெற்று வழக்கு தொடரப்பட்டிருப்பதாக வரும் புகார்கள் தீவிரமாக ஆராயப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

 இந்த நிலையில், திமுக சட்டப்பிரிவு ஆலோசகர் வழக்கறிஞர் வில்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சிபிஐ விசாரணை உத்தரவு என்பது இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை கோரி இருவர் மோசடியாக மனு தாக்கல் செய்திருப்பது குறித்து உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என தெரிவித்தார். தனி ஒரு வழக்காக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்றும் தெரிவித்தார். இன்றைய தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்காது என்றும் தமிழக அரசு ஏற்கனவே உதவி செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரூர் சம்பவம் குறித்து போலி வழக்கா? தீவிரமாக ஆராயப்படும்... சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...!

சிபிஐ விசாரணை கோராத தமிழக வெற்றி கழகம் எதற்காக சிபிஐ விசாரணை உத்தரவை வரவேற்கிறது என கேட்டார். தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். வழக்கில் மோசடி என தெரிந்தால் உச்சநீதிமன்றம் தற்போது வழங்கிய உத்தரவை கூட ரத்து செய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறினார். 

இதையும் படிங்க: திமுகவின் திட்டமிட்ட சதி… தவெகவை முடக்க முயல்கிறார்கள்… ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share