×
 

ஒரே மேடையில் இபிஎஸ் - அண்ணாமலை... மூப்பனார் நினைவிடத்தில் சுவாரஸ்ய நிகழ்வு...!

ஒரே மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றது அரசியலில் கவனம் பெற்றுள்ளது. 

தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனார் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த பிறகு முதல் முறையாக அண்ணாமலையும் - எடப்பாடி பழனிசாமியும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது தமிழக அரசியலில் சுவாரஸ்ய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

அதிமுக தலைவர்களை வாய்க்கு வந்தபடி அண்ணாமலை வசைபாடியதால் தான் கடந்த பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்துக்கொண்டார். அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கடுமையான விமர்சனங்களையே முன்வைத்து வந்தனர். இதனிடையே வர உள்ள சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் அதிமுகவின் கூட்டணி தேவை என முடிவெடுத்த அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி கன்டிஷனின் படி அண்ணாமலையைக் கட்சியில் இருந்து ஒதுக்கியதாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்கியடித்துவிட்டு, முன்னாள் அதிமுக விசுவாசியான நயினார் நாகேந்திரனை எடப்பாடி பழனிசாமியின் ரெக்கமெண்டேஷன் அடிப்படையிலேயே மாநில தலைவராக பாஜக தலைமை நியமித்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இதனால் கடும் அப்செட்டிற்கு ஆளான அண்ணாமலை, அதிமுக கூட்டணியை விமர்சிப்பது, தனியாக பிரஸ் மீட் நடத்துவது, வார்ரூம் போட்டு பாஜக முக்கிய நிர்வாகிகளை சோசியல் மீடியாக்களில் விமர்சிப்பது, பாஜக போராட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பது என தனது வேலையைக் காட்டி வந்தார். 

இதையும் படிங்க: வாக்குறுதி சாக்கடைக்கு போச்சு! மக்கள் குறை குப்பைக்கு போச்சு... திமுகவை விளாசிய அண்ணாமலை

ஆனால் சமீபத்தில் மதுரையில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பாஜகவின் கடமை என அண்ணாமலை பேசியதும் அரசியல் களத்தில் கவனத்தை பெற்றது. அண்ணாமலையின் இந்த மனமாற்றத்திற்கு வர உள்ள சட்டமன்ற தேர்தலும், அதற்காக அமித் ஷா கொடுத்துள்ள அறிவுரைகளும் தான் காரணம் எனக்கூறப்படுகிறது. 

சரி ஊடகங்களில் மட்டும் தான் எடப்பாடி பழனிசாமியை ஆஹா, ஓஹோ என பாராட்டுகிறார். சமீபத்தில் நெல்லை நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு வைத்த விருந்தில் கூட பங்கேற்காமல் அண்ணாமலை நழுவியதாக கூறப்பட்டது.ஆனால் இன்று தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனார் நினைவு தினத்தை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றது அரசியலில் கவனம் பெற்றுள்ளது. 

 

 

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு முதல்ல ஆபீஸ் கொடுங்கப்பா... பாஜகவின் சிங்கத்தை பங்கமாய் கலாய்த்த காங்கிரஸ் எம்.பி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share