×
 

அதிமுகவை உடைத்து கைப்பற்ற திட்டம்!! பாஜக போட்ட பக்கா ப்ளான்! செங்கோட்டையன் சொல்லும் உண்மைகள்!

''என்னை டில்லிக்கு அழைத்து, அ.தி.மு.க .,வை ஒருங்கிணைக்க சொன்னது பா.ஜ., தான்,'' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “என்னை டில்லிக்கு அழைத்து, அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கச் சொன்னது பா.ஜ.க.வே. நானும் அதைத்தான் செய்தேன்” எனக் கூறி, பழனிசாமியை “கொல்லைப்புற முதல்வர்”, “குடும்ப ஆட்சி நடத்துபவர்” என வெளிப்படையாகத் தாக்கினார். 

இதற்குப் பதிலடியாக, செங்கோட்டையன் உட்பட 14 பேரை அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பழனிசாமி நீக்க உத்தரவிட்டார். இந்தப் பரபரப்பு நிகழ்வு, 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வில் புதிய பிளவை ஏற்படுத்தியுள்ளது.

கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று (நவம்பர் 7) செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “ஜெயலலிதா இருந்தபோதும், மறைவுக்குப் பின்பும் மூன்று முறை ஓ. பன்னீர்செல்வமே முதல்வராக்கப்பட்டார். தகுதி உள்ளவர் என்றால், பழனிசாமி ஏன் முதல்வர் ஆக்கப்படவில்லை? கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் அவர். தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கொச்சைப்படுத்தியவர்” என்று கடுமையாக விமர்சித்தார். 

இதையும் படிங்க: செங்கோட்டையன், ஓபிஸ், டிடிவி தினகரன்!! விஜய் கட்சிக்கு வலை வீசும் மூவர் கூட்டணி !! சசிகலாவுக்கும் சம்மதமாம்?!

மேலும், “என்னை டில்லிக்கு அழைத்து, அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கச் சொன்னது பா.ஜ.க. தலைமைதான். நானும் சசிகலா, பன்னீர், தினகரனை சந்தித்து ஒருங்கிணைப்பு முயற்சி செய்தேன். ஆட்சியைப் பிடிக்க உதவ வேண்டும் என பா.ஜ.க.விடம் கேட்டேன்” என்று தெரிவித்தார்.

“கோடநாடு கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கேட்காதது ஏன்? கருணாநிதி வீட்டு பணியாளர் பிரச்னைக்காக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க., ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் நடந்த கொலைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார். “கோபி தொகுதியில் 45 ஆண்டுகள் சிற்றரசர் போல வாழ்ந்தேன் என்கிறார் பழனிசாமி. ஆனால், ‘எடப்பாடியில் இல்லாத அளவுக்கு கோபியில் சாலைகள் சிறப்பாக உள்ளன’ என அவரே என்னைப் பாராட்டினார்” என்று சாடினார்.

“லோக்சபா தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களை மறந்து, பணக்காரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் பழனிசாமி. அவரது மகன், மருமகன், மைத்துனர், அக்கா மகன்தான் கட்சியை நடத்துகிறார்கள். உழைப்பாளர்கள் மண்டியிட வேண்டிய நிலை. இப்படி நீக்கிக் கொண்டே போனால், முழுநிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும்” என எச்சரித்தார்.

“என்னை தி.மு.க.வின் ‘பி’ டீம் என்கிறார். அவருக்கு அதைச் சொல்ல தகுதியில்லை. நான் எந்தக் கட்சியையும் கடுமையாக விமர்சித்ததில்லை. சட்டசபையில் 40 நாட்கள் அவருக்கு பின்னால் அமர்ந்தேன்; ஒரு நாள் கூட திரும்பிப் பேசவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலடியாக, அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்: “கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால், முன்னாள் எம்.பி. சத்தியபாமா, செங்கோட்டையன் உள்ளிட்ட 14 பேர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க.வினர் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது.” நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், “கட்சி வலிமையாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். ஒற்றுமையுடன் இருந்தால், மற்றவர்கள் நம்மைத் தேடி வருவார்கள்” எனக் கூறினார். “பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது; தன் காலில் நடந்து செல்ல வேண்டும்” என விஜய்யின் பேச்சை மறைமுகமாக எதிரொலித்தார். 

இந்தப் பிளவு, அ.தி.மு.க.வின் உள் குழப்பத்தை மேலும் ஆழமாக்கியுள்ளது. 2026 தேர்தலுக்கு முன், பா.ஜ.க.வுடன் கூட்டணி, சசிகலா-தினகரன் இணைப்பு போன்ற விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. செங்கோட்டையனின் இந்தத் தாக்குதல், கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: தொடர் நெருக்கடி கொடுக்கும் அமலாக்கத்துறை!! அடக்கி வாசிக்கும் அமைச்சர் நேரு!! தேர்தல் ஃபீவர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share