×
 

தேமுதிகவும், ஓபிஎஸ்-உம் கட்டாயம் வேணும்! எடப்பாடி பழனிசாமி அதிமுகவினர் ரிக்வெஸ்ட்! தேர்தல் பார்முலா!

சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டுமானால், தே.மு.தி.க.,வையும், பன்னீர்செல்வம் அணியையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என, வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலின்போது அ.தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தரப்பில் உள் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. கட்சியின் வேட்பாளர் தேர்வு நேர்காணல்களின்போது, பல மாவட்ட நிர்வாகிகள் தேமுதிக (தே.மு.தி.க.) மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணியையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். திமுகவை வீழ்த்த வேண்டுமானால் இந்த இரு அணிகளும் அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கடந்த 9-ஆம் தேதி முதல் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல்களை நடத்தி வருகிறார். நேற்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளுக்கான விருப்ப மனுதாரர்களுடன் நேர்காணல் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலர் விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நேர்காணலில் பங்கேற்றவர்களை மாவட்டச் செயலர்கள் முன்னிலையில் தொகுதி வாரியாக அழைத்து பேசிய பழனிசாமி, "நம் கூட்டணி நாளுக்கு நாள் வலிமையடைந்து வருகிறது. அடுத்து அதிமுக ஆட்சி தான். யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், எந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் வேலை செய்யுங்கள்.

இதையும் படிங்க: பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் ஸ்டாலின்!! அதிமுக, பாஜக, தவெகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! திமுக மாஸ் ப்ளான்!

உங்களுக்கெல்லாம் சிறந்த எதிர்காலம் உண்டு" என்று உற்சாகமூட்டினார். பாமக (அன்புமணி தரப்பு) மற்றும் அமமுக (டிடிவி தினகரன்) இணைந்துள்ளதால், நேர்காணலுக்கு வந்தவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர்.

ஆனால், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் நேரடியாக வலியுறுத்தியது – தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும். திமுகவை தோற்கடிக்க வேண்டுமானால் தேமுதிகவின் வாக்கு வங்கி அவசியம் என்று அவர்கள் கூறினர். 

அதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகிகள், ஓ. பன்னீர்செல்வம் அணியையும் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தினகரனை சேர்த்தது போல, ஓபிஎஸ்ஸையும் சேர்த்தால் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

இந்த வலியுறுத்தல்கள் அதிமுக தலைமைக்கு பெரும் சவாலாக உள்ளன. ஏற்கனவே பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில், தேமுதிக மற்றும் ஓபிஎஸ் அணியை சேர்ப்பது குறித்து தலைமை என்ன முடிவெடுக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி விரிவாக்கம் நடந்தால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு உயரும் என்றாலும், உள் சமநிலை மற்றும் தொகுதி பங்கீடு சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவின் இந்த உள் விவாதங்கள் கட்சியின் ஒற்றுமையை சோதிக்கும் முக்கிய கட்டமாக அமைந்துள்ளன. தலைமை இந்த கோரிக்கைகளை ஏற்குமா? அல்லது தற்போதைய கூட்டணியுடன் தொடருமா? என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகும்.

இதையும் படிங்க: தேமுதிக பக்கா ப்ளான்!! கூட்டணி அறிவிக்காததன் அசத்தல் பின்னணி! யாருக்கு கல்தா?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share