அதிமுக பிளவை சரி செய்ய போராடும் எடப்பாடி பழனிசாமி! வேலுமணிக்கு பதவி?! சி.வி.சண்முகத்துடன் மோதல்?!
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவை சரி செய்யும் முயற்சியில், பொதுச்செயலர் பழனிசாமி இறங்கியுள்ளபோதும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் மோதல் தொடருகிறது.
சென்னை: அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை சரி செய்ய பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துடனான மோதல் தொடர்கிறது. இது கட்சியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிருப்தி அணியினர் பழனிசாமியுடன் இணைந்த பிறகும், அவர்களுக்கு முக்கிய பதவிகளை உடனடியாக திருப்பிக் கொடுக்க அவர் தயங்கியதால் பலர் மீண்டும் அதிருப்தியடைந்தனர்.
இதையடுத்து பழனிசாமிக்கு நெருக்கமான முன்னாள் நீதிபதி மற்றும் தொழிலதிபர்கள் சிலர் அவரை சந்தித்து, “திரும்பி வந்தவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கொங்கு மண்டலத்தில் கட்சியை மீட்டெடுக்க வேலுமணி, தங்கமணி அவசியம்” என அறிவுரை கூறினர்.
இதையும் படிங்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!
இதை ஏற்றுக்கொண்ட பழனிசாமி, விஸ்வநாதன் மற்றும் வேலுமணிக்கு துணை பொதுச் செயலர் பதவி வழங்கினார். ஆனால் இந்த முடிவுக்கு கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். உதயகுமார் உள்ளிட்டோர் எதிர்பார்த்த பதவிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தங்கமணிக்கு கும்பலோடு அமைப்புச் செயலர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. கட்சி தாவும் நிலையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கொள்கைப் பரப்பு இணைச் செயலர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், சி.வி. சண்முகத்துக்கு இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. எம்.எல்.ஏ. பதவியை காப்பாற்ற பழனிசாமிக்கு ஆதரவு கடிதம் கொடுத்த சண்முகம், இன்று வரை அவரை சந்திக்கவில்லை. மாறாக, பழனிசாமிக்கு எதிராக பேசி வருவதால் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளார் பொதுச் செயலர். சண்முகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் கட்சியில் இருந்து நீக்கவும் பழனிசாமி தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வேலுமணி மற்றும் தங்கமணிக்கு மாவட்டச் செயலர் பதவி மீண்டும் வழங்கப்படாததால் அவர்களும் அதிருப்தியில் உள்ளனர். த.வெ.க. அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த 25 எம்.எல்.ஏ.க்களில் ஐந்து பேர் ஏற்கெனவே கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர்.
மற்றவர்கள் பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையிலும், மாவட்டச் செயலர் பதவிகள் அவர்களின் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. துணைப் பொதுச் செயலர், அமைப்புச் செயலர் போன்ற பதவிகளை அலங்காரப் பதவிகளாகவே அதிருப்தியாளர்கள் பார்க்கின்றனர்.
அ.தி.மு.க.வில் பிளவை ஒட்டவைக்கும் முயற்சிகள் தொடரும் நிலையில், உள்ளடி மோதல்கள் குறையாமல் இருப்பது கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.
இதையும் படிங்க: அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!