எண்ணம் ஈடேறணும்!! கட்சி கட்டுப்பாட்டுக்குள்ள வரணும்! ஹோமம் நடத்தி, திருஷ்டி கழிக்கும் அதிமுகவினர்!!
அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் தீர, முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் ஆதரவாளர்கள், சிறப்பு ஹோமம் நடத்தி திருஷ்டி கழித்தனர்.
அ.தி.மு.க.வில் தொடர்ந்து நீடித்து வரும் உட்கட்சி பூசல்களுக்கு தீர்வு காணும் நோக்கில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் சிறப்பு ஹோமம் நடத்தி திருஷ்டி கழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி ஒற்றுமைக்காகவும், பழைய செல்வாக்கை மீட்டெடுப்பதற்காகவும் ஆன்மிக வழியில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் சிறப்பு ஹோமம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், தடைகள் மற்றும் திருஷ்டி விலக வேண்டும் என்பதற்காக இந்த சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹோமத்தைத் தொடர்ந்து, இரவு 10 மணியளவில் சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு தேங்காய் உடைத்தல், எலுமிச்சை சுற்றுதல் உள்ளிட்ட திருஷ்டி கழிக்கும் சடங்குகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும், கட்சி முழுவதும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதே இந்த பரிகாரத்தின் நோக்கமாக இருந்ததாக உள்ளார்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவை உடைக்கும் எண்ணம் இல்லை..!! சசிகலா, டிடிவி-யை இணைக்க வேண்டும்..!! எஸ்.பி.வேலுமணி விருப்பம்..!!
அ.தி.மு.க.வில் சமீப காலமாக தொடரும் பிளவுகள் மற்றும் குழுக்களுக்கிடையேயான மோதல்கள் கட்சியின் வளர்ச்சியை பாதித்து வருகின்றன. இதனால் பல முக்கிய நிர்வாகிகள் கவலை அடைந்துள்ள நிலையில், சிலர் ஆன்மிக சக்தியை நம்பி இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கட்சியை ஒன்றிணைக்க பல்வேறு ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே பல்வேறு விதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை “கட்சியின் நலன் கருதிய நல்ல முயற்சி” என வரவேற்கும் நிலையில், மற்றவர்கள் “அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மிக பரிகாரம் தேவையா?” என விமர்சனம் செய்கின்றனர்.
எனினும், கட்சியில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் உறுதியாக உள்ளனர். வரும் நாட்களில் இந்த ஹோமத்தின் பலன் கட்சிக்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது அ.தி.மு.க.வில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இதையும் படிங்க: தமிழகத்தில் இத்தனை MLA-க்கள் மீது கிரிமினல் வழக்குகளா..!! முதலிடத்தில் CM விஜய்யின் தவெக கட்சி..!!