×
 

கடல் கடந்த காதல்..! திண்டுக்கலில் டும்... டும்..! கரம் கோர்த்த அமெரிக்க ஜோடி!”

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணை திண்டுக்கல்லை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் திருமணம் செய்து கொண்டார்.

திண்டுக்கல் நாகல்நகர் அருகே உள்ள ராஜலட்சுமி நகர் பகுதியை பூர்விகமாக கொண்டவர்கள் ஜெயபிரகாஷ் - சுகந்தி தம்பதி. ஜெயப்பிரகாஷ் வேலைக்காக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்றார் தற்பொழுது அமெரிக்கன் சிட்டிசன் ஆக வசித்து வருகிறார். இந்த தம்பதியினர் இளைய மகன் சாம்ராட், அமெரிக்கன் சிட்டிசனாக ஐடி துறையில், சான் பிரான்சிஸ்கோ உள்ள தனியார் நிறுவனத்தில் தலைவராக பணியாற்றி வருகிறார். 

அதேபோல் நேர்பாலத்தை பூர்விகமாக கொண்ட ரூபன் - ஜேனட் மகளான பியாங்கா. இவர் தனது தாத்தா - பாட்டி காலத்தில் இருந்து அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ நகரில் வாழ்ந்து வருகின்றார். இவரும் தனியார் நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்துள்ளது.

இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். கிறிஸ்துவ பெண்ணான பியான்காவை தமிழ் முறைப்படி திண்டுக்கல்லில் திருமணம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். இதனை எடுத்து பியான்காவின் பெற்றோர்கள் நண்பர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தனர். தனியார் திருமண மண்டபத்தில் பட்டு வேட்டியுடனும், மணப்பெண் பட்டுப்புடவையுடன் தமிழ் முறைப்படி, உறவினர்கள் புடைசூழ மாப்பிள்ளை காசி யாத்திரை செல்லுதல், பாத பூஜை செய்தல், மாலை மாற்றுதல், மெட்டி அணிவித்தல், மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுதல் என நடத்தப்பட்டு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதையும் படிங்க: அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்!! அமெரிக்காவை கதறவிட்ட ஜெய்சங்கர்!! கறார் பதில்!

மணமகள் பியான்கா பேசும்போது, சாம்ராட்டைத் திருமணம் செய்து கொண்டதிலும், ஜெயப்பிரகாஷ் குடும்பத்தின் மருமகளாக மாறியதிலும் தான் இப்போது 'திண்டுக்கல்லின் மகள்' என்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறினார்.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி அலறிய கணவன்... சத்தம் கேட்டு காப்பாற்ற சென்ற மனைவி, கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share