தவெகவில் செங்கோட்டையன்! கொங்கு கோட்டை போயிருச்சே! அப்செட்டில் அமித்ஷா! ஆத்திரத்தில் இபிஎஸ்! நைனார் சமாளிப்பு!
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்.
அதிமுகவின் கோங்கு கோட்டை என்று அழைக்கப்பட்ட மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததால் தமிழக அரசியல் அரங்கில் பெரும் புயல் காற்று வீசியுள்ளது. 50 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து, 9 முறை எம்.எல்.ஏ.வாக வென்று, முன்னாள் அமைச்சராக இருந்த செங்கோட்டையனின் இந்த திடீர் திருப்பம், NDA கூட்டணியின் கனவுகளை தூள் தூளாக்கியிருக்கிறது.
பாஜக மத்திய தலைவர் அமித் ஷா அப்செட் ஆகி, எடப்பாடி பழனிசாமி (EPS) கடும் கோவத்தில் இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் “இது அதிமுக-பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று சமாதானம் கூறியுள்ளார்.
அதிமுகவில் செங்கோட்டையன் நீண்ட காலமாக “கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும், வெளியேற்றப்பட்ட தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தி வந்தார். எடப்பாடி தலைமையில் கட்சி தேர்தல்களில் தோல்வியடைந்ததால், “எல்லா வாய்ப்புகளையும் இணைத்து வலுப்படுத்த வேண்டும்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, “10 நாட்கள் அவகாசம் தருகிறேன், இல்லையென்றால்…” என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால், 10 நாட்கள் கழித்தும் எந்த மாற்றமும் இல்லை. இதற்கிடையே செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்தார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அவரை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கினார்.
இதையும் படிங்க: 8 முறை எம்.எல்.ஏ!! ‘52 ஆண்டு வெற்றியாளர்’ செங்கோட்டையன் கடந்து வந்த பாதை!!
இந்த நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைவார் என்ற பேச்சுகள் வேகமெடுத்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று அவர் தனது கோபிச்செட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இன்று காலை சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்துக்கு சென்ற செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக உறுப்பினராக இணைந்தார்.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் அவரை வரவேற்றனர். செங்கோட்டையனுக்கு கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவருடன் 82 ஆதரவாளர்களும், முன்னாள் எம்.பி. சத்யபாமாவும் இணைந்தனர்.
திமுக தரப்பு செங்கோட்டையனை தங்கள் கட்சியில் சேர்க்க பகீர்த்தமாக முயன்றது. ஆனால், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் திமுகவில் சேரவில்லை. அதிமுக-திமுக இணைப்புக்கு எதிரானவராக இருந்ததால் இது ஆச்சரியமில்லை. மறுபுறம், செங்கோட்டையன் தவெக இணைப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, “அவர் இணைந்ததற்கு போய் அவரைத்தான் கேளுங்கள்” என்று கோபத்துடன் பதிலளித்தார். இது EPS-ன் கோவத்தை உணர்த்துகிறது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது, “செங்கோட்டையன் தவெக இணைவு அதிமுக-பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாங்கள் வலுவாக இருக்கிறோம்” என்று தெளிவுபடுத்தினார். ஆனால், அரசியல் வழிகாட்டிகள் சொல்வது வேறு. “விஜயை NDA-யில் இணைக்கலாம் என்று அமித் ஷா நினைத்திருந்தார். செங்கோட்டையன் போனதால் அது கடினமாகிவிட்டது. கொங்கு வாக்குகளை தவெக இழுக்கலாம்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த இணைவு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தவெகவுக்கு பெரும் பூஸ்ட். செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவரை தவெக பெற்றிருக்கிறது. அதிமுகவுக்கு இது பெரும் இழப்பு. NDA கூட்டணி எப்படி மாறும்? அரசியல் அரங்கில் இப்போது அது தான் பெரிய கேள்வி!
இதையும் படிங்க: 'சத்தம் பத்தாது விசில்போடு' விசில் சின்னம் கேட்கும் தவெக!! ஆட்டோவும் ஆப்சன்ல இருக்கு!