×
 

சூடுபிடிக்கும் அரசியல் களம்.. மாநில நிர்வாகிகளை சந்திக்க மதுரை வரும் அமித்ஷா!

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை தர உள்ளார்.

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து களம் காண்கின்றன. கடந்த முறை தமிழகத்திற்கு கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக அனுப்பிச்சா வந்திருந்தார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து ஆலோசனை நடத்திய பிறகு கூட்டணியை முடிவு செய்தார். இந்த நிலையில் அதிமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக மாநில நிர்வாகிகளை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவால் காங்.,-ல் பரபரப்பு… ராகுல்காந்திக்கு வந்த புதிய சிக்கல்!!

இதற்காக வரும் ஜூன் 8-ம் தேதி அமித்ஷா மதுரை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது, சட்டசபை தேர்தல் தொடர்பாக மாநில நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மதுரை ஒத்தக்கடையில் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளதாகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 3 கார்களில் போய் அமித் ஷாவை சந்தித்தது ஏன் தெரியுமா? மௌனம் கலைத்த எடப்பாடி பழனிசாமி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share