×
 

தங்கமணி, வேலுமணி உங்க வீரம் எங்க?... இபிஎஸ் ஆதரவாளர்களை கலாய்த்து அமமுக ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு...!

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களான தங்கமணி வேலுமணி உள்ளிட்டோரை தங்களது அணிக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கழகத்தை காக்க மாவீரனாக செங்கோட்டையன் இருக்கிறார். நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, சண்முகம், அன்பழகன்., உங்களது பழைய வீரத்தை எங்கு அடகு வைத்துள்ளீர்கள். உங்களை அடையாளம் காட்டிய அதிமுகவை மீட்டெடுக்க விரைந்து வாருங்கள் என அழைப்பு விடுத்து நாகர்கோவிலில் அமமுக_வினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். செங்கோட்டையனுக்கு ஆதராவாக போஸ்டர்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிலநாட்களுக்கு முன்னர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டிய நிலையில் இன்று அமமுக வினர் புதிதாக போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ளனர்.

இதையும் படிங்க: SIR... பூத் ஏஜென்ட்களிடம் பொறுப்பா? அதிமுக கடும் எதிர்ப்பு... தேர்தல் ஆணையத்தை அணுக முடிவு...!

அதில் கழகத்தை காக்க மாவீரனாக செங்கோட்டையன் இருக்கிறார் எனவும்,உங்களது பழைய வீரத்தை எங்கு அடகு வைத்துள்ளீர்கள்,உங்களை அடையாளம் காட்டிய அதிமுகவை மீட்டெடுக்க புரட்சித் தாய் சின்னம்மா தலைமையில் அணிதிரள்வோம் என நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி, சண்முகம், அன்பழகன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

 

 

இதையும் படிங்க: கவலையே வேணாம்... தானா நடக்கும்! கூட்டணி பற்றி பேச வேண்டாம் என இபிஎஸ் அறிவுரை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share