"விஜய் ஃபோர்ஜரி"..! அது FAKE வீடியோ..! போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன்..!!
முதலமைச்சர் ஆவதற்கு போர்ஜெரி செய்து கொண்டிருக்கிறார் விஜய் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எம் எல் ஏ கடிதம் விவகாரம் குறித்து பேசினார். தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு என்ற செய்தியை பார்த்ததும் இருந்ததாக தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்எல்ஏ கையெழுத்து போட்டதாக வீடியோ பரவும் நிலையில் அந்த வீடியோவை எடுத்தது யார் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
மகிழ்ச்சியுடன் சுயநலையுடன் எம்எல்ஏ கடிதம் எழுதினார் என்று தமிழக வெற்றி கழகம் விளக்கம் கொடுத்திருப்பதாகவும், அந்த வீடியோவை எடுத்தது விஜயா.? செங்கோட்டையனா.? ஆதவ் அர்ஜுனாவா.? கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ எங்கு வைத்து எடுக்கப்பட்டது என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை டிடிவி தினகரன் முன் வைத்தார்.
தன்னை மிரட்டி பார்ப்பதாகவும் பயமுறுத்தி பார்ப்பதாகவும் தெரிவித்தார். எம்எல்ஏ காமராஜர் கையெழுத்து விட்டதாக கூறும் அந்த கடிதம் எங்கே என்றும் அதற்கான ஒரிஜினலை வெளியிட தயாரா என்றும் கேட்டுள்ளார். தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், எம்எல்ஏ வை தொடர்பு கொண்ட போது பேச முடியாமல் போனது என்றும் அதன் பிறகு ஆளுநரை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்.. கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!
எம் எல் ஏ கடிதம் கொடுத்ததாக ஆளுநரிடம் தமிழக வெற்றி கடகம் நகலை கொடுத்ததாகவும் அதற்கான ஒரிஜினல் பின்னர் வழங்கப்படும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். கவர்னர் மாளிகையில் இருந்து விசாரித்த போது தான் அந்த கடிதத்தை எழுதியதாக கூறியதும் எம்எல்ஏ அதிர்ச்சியானதாகவும் தெரிவித்துள்ளார். அது உண்மையான வீடியோ கிடையாது என்றும் போர்ஜரி என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: வீட்ல கூட பாதுகாப்பில்ல..! புரையோடும் கஞ்சா...! TTV தினகரன் காட்டம்..!!