அவரும் கொரோனால போயிருப்பாரு..! ஸ்டாலினை இழுத்துவிட்ட EPS..! கொந்தளித்த அன்பில் மகேஷ்..!!
முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு இடங்களில் திமுக அரசின் குறைபாடுகளை கூறி வருகிறார்.
இந்த நிலையில், திமுக ஆட்சியின்போது கொரோனா வந்திருந்தால் முதலமைச்சரும் போயிருப்பார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசும்போது, திமுக ஆட்சியில் வறட்சி வந்ததா, வெள்ளம் வந்ததா, கொரோனா வந்ததா என்று கேள்வி எழுப்பினார். அப்படியெல்லாம் வந்திருந்தால் இந்த முதலமைச்சர் காணாமல் போயிருப்பார் என்று கூறினார்.
இவரும் அந்த கொரோனாவில் போயிருப்பார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்தார். சுயமரியாதையை மனதார இழந்த எடப்பாடி பழனிசாமி நாகரிகப் பேச்சையும் இழந்துவிட்டார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காசு கொடுத்து போ..! ஓசி பஸ்ல போறவன் ஓட்டு வேணாம்..! சீமான் பரப்புரை..!
தங்கள் உயிரினும் மேலான தலைவரின் உயிரை பற்றியே பேசியுள்ளார் என்றும் இதுபோன்ற வார்த்தைகள் தமிழ்நாட்டிற்கு அழகல்ல என்றும் கூறினார். அண்ணாவின் பெயரை கொண்டிருக்கும் உங்கள் கட்சிக்கும் அழகல்ல எனவும் தெரிவித்தார். நாங்கள் மரணத்திற்கும் அஞ்சுபவர்கள் அல்ல என்றும் உங்களை போல டெல்லிக்காரர்களுக்கும் அஞ்சுபவர்கள் அல்ல எனவும் உங்களின் வெறுப்பையும் வீராப்பையும் அவர்களிடம் காட்டுங்கள் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..? ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!