திமுக ஆட்சி செய்ய தகுதி இல்ல... கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி காட்டம்..!!
திமுகவினருக்கு ஆட்சி செய்ய தகுதியே இல்லை என அன்புமணி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதாகவும் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, வரும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.
2021-ஆம் ஆண்டு, ஸ்டாலின் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திமுக-வினுடைய விடியா ஆட்சியில் தமிழ் நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது என்றும் தமிழ் நாட்டின் தெருக்களில் கஞ்சா புழக்கம் இல்லாத இடமே இல்லை என்கிற நிலையை இந்த விடியா அரசு உருவாக்கி இருக்கிறது என்று கூறினார்.
அதன்படி, திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கடலூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அன்புமணி, தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 5 கொலைகள் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அக்யூஸ்டுகளுக்கு திமுக துணை... வாய் திறப்பாரா ஸ்டாலின்? வெளுத்து வாங்கிய EPS..!!
திமுகவினருக்கு ஆட்சி செய்வதற்கான தகுதியே கிடையாது என்றும் அன்புமணி தெரிவித்தார். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால் எதற்காக இருக்கிறீர்கள் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் சாராயமும், கள்ளச்சாராயமும் ஓடுகிறது என்று குற்றம் சாட்டினார். ஒரு பக்கம் சாராயம், மறுபடியும் கஞ்சா, போதைப் பழக்கம் அதிகரித்திருப்பதாக அன்புமணி குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!