விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வெற்றி குறித்து அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார்.
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற இந்தத் தேர்தலில், முதல்வர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தல் அனுபவத்திலேயே 234 தொகுதிகளில் 108 இடங்களை கைப்பற்றி ஒற்றைப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்தது.
இது தமிழ்நாட்டில் 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. மே 4 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, மக்கள் தீர்ப்பு தெளிவாக இருந்தது. தேர்தலின் மொத்த வாக்காளர் பங்கேற்பு சுமார் 85.1 சதவீதமாக இருந்தது.
இது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத உயர் பதிவு. இந்த உயர் பங்கேற்பே மக்களின் அரசியல் மாற்ற விருப்பத்தை பிரதிபலித்தது. த.வெ.க சுமார் 34.92 சதவீத வாக்குகளைப் பெற்று, தனது பலத்தை நிரூபித்தது. தமிழக அரசியலில் புதிய அலையாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது. மாபெரும் மக்கள் சக்தி என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: "அரியர்ஸ் வைக்காதீங்க"..! நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை..!
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது சுனாமி எல்லாம் அல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். எட்டு மாவட்டங்களில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டு மக்கள் மாற்றம் வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்திருப்பதாக அன்புமணி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! நம்ம தமிழக CM-க்கு மாசம் இவ்ளோ சம்பளமா..!! அப்போ அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு..??