×
 

”நான் மட்டும் முதல்வரானால் கூவம் தண்ணீரைக் குடிக்கலாம்” - மக்களுக்கு ஷாக் கொடுத்த அன்புமணி ராமதாஸ்...!

திருவள்ளூரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ்,  தனக்கு முதல்வராகும் ஒரு வாய்ப்பு   கொடுத்தால்  கூவம்  ஆற்றில்  தண்ணீர் குடிப்பதற்கான மாற்றத்தை கொண்டு வருவேன் என பாமகவின்  அன்புமணி தெரிவித்துள்ளார்.

உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற தலைப்பில் அன்புமணி கடந்த 25ஆம் தேதி திருப்போரூரில் தொடங்கி ஆறாவது நாளாக இன்று திருவள்ளூரில் நடைப்பயணம் மேற்கொண்டார்.  ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் நடைபயணமாக சென்ற அவர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே போடப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 

தமிழ்நாட்டுக்கு விடியல் வர வேண்டும், தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மது, போதை என தொடர்கிறது எனவும், ஒரு காலத்தில் நாலு, ஐந்து வீடுகள் தான் குடிக்கிற வீடு என்பார்கள், ஆனால் இன்று 2 வீடுகள் தான் குடி இல்லாத வீடுகளாக இருக்கிறது எனவும்,மதுவை விட போதை மாத்திரைகள் சாப்பிடுவது அதிகரித்துள்ளது எனவும், அமெரிக்காவில் கிடைக்கும் அத்தனை போதை பொருட்களும் தமிழ்நாட்டில் கிடைக்கிறது எனவும் கூறினார். 

திமுகவின் ஜாபர் சாதிக் என்பவரை பிடித்து விசாரித்த போது 3 ஆயிரம் கோடி இருப்பது தெரியவந்துள்ளதாகவும், காவல் துறைக்கு தெரியாமல் போதை பொருட்கள் விற்க முடியாது, அவர்களிடம் கேட்டால் திமுககாரர்களிடம் இருந்து போன் வருவதாக கூறுகிறார்கள் எனவும், தமிழக காவல் துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை எனவும் கூறிய அவர், ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் குற்றவாளியை பிடிக்க அழுத்தம் கொடுத்ததாலே காவல் துறையினர் பிடித்தனர்  என்றார்,

இதையும் படிங்க: #BREAKING ஆகஸ்ட் 9-ல் பாமக பொதுக்குழு - ராமதாஸுக்கு எதிராக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அன்புமணி...!

குடிப்பதற்காக தமிழகத்திற்கு வந்ததாக அந்த குற்றவாளி கூறுகிறார், தமிழகத்தில் போதை பொருட்கள் சரளமாக கிடைக்கிறது எனவும், முன்பு எல்லாம் ஆந்திராவுக்கு மது குடிப்பதற்காக செல்லக்கூடியவர்கள் தற்போது தமிழகத்திற்கு மது போதைப் பொருட்கள் வாங்க ஆந்திராவில் இருந்து வருகிறார்கள், தமிழக பெண்களே ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு  போடாதீர்கள்.ஓட்டு போட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்தால் மது விலக்குக்காக முதல் கையெழுத்து போடுவேன் என கூறிய ஸ்டாலின் அவர்களே என்ன ஆச்சு எனவும், கூவம் ஆறு திருவள்ளூரில் இருந்து தான் தொடங்குகிறது எனவும், வரும் தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் எனவும்,உரிமைகளை தட்டி கேட்க வேண்டும், திமுகவினரிடம் கேளுங்கள் எனவும், 10 உரிமைகளை மீட்டெடுத்தால் தமிழகம் சிங்கப்பூருக்கு நிகராக இருக்கும் எனவும் தெரிவித்தார். 

சமூகநீதிக்காவே பாமகவை ராமதாஸ் தொடங்கினார் எனவும், சலவை தொழிலாளர்கள், முடி திருத்துவோர்  எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிந்தால் தான் இட ஒதுக்கீடு சமூக நீதி கொடுப்பீர்கள் எனவும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஸ்டாலின் பிடிவாதம் பிடித்து வருகிறார் எனவும்,
மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் உரிமை இல்லையா எனவும், அதிகாரம்  வைத்து கொண்டு இல்லை என கூறும் கோழை ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது எனவும் குற்றச்சாட்டினார். 

ஸ்டாலின் அண்ணாச்சி, மின் கணக்கெடுப்பு என்னாச்சி? என கேள்வி எழுப்பிய அன்புமணி, திமுகவுக்கு அதிகமாக வேலை செய்தது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான், அவர்களே தான் இப்போது போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர் எனவும், திமுகவின் டிஎன்ஏ-வில் பொய் சொல்வது உள்ளது எனவும் தமக்கு வாய்ப்பு கொடுத்தால் கூவம் தண்ணீரை குடிநீராக மாற்றுவோம் எனவும், தமிழ்நாட்டில் பொம்மை ஆட்சி நடக்கிறது.ரெடி ஆக்‌ஷன் என ஆட்சி நடக்கிறது எனவும் சகட்டுமேனிக்கு சாடினார். 
 

இதையும் படிங்க: “அறிவு இருக்கா?” - அன்புமணி நிகழ்ச்சியில் எழுத்துப்பிழையுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share