ராமதாஸ் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார்... அன்புமணி பரபரப்பு தகவல்!!
ராமதாஸை புகழ்ந்து பேசுவதும், அவரை திடீரென சந்திப்பதும் திமுகவின் சூழ்ச்சி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் இனி தானே பாமக தலைவர் என்றும் அறிவித்தார். இதனால், பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மிகக் கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதல் தற்போது வரை தொடர்கிறது. இதனிடையே, சென்னை பனையூரில் பாமக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் கலந்துக்கொண்டு பேசிய அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் கூறியதாலேயே 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன்.
அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என சொல்ல போகிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ் சரி என்று சொல்லியதால்தான் பாஜகவினர் தைலாபுரம் வந்தனர். அதன்பிறகுதான் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. தற்போது இல்லை என மறுக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் மீது காங்கிரஸ், விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்? ராமதாஸை புகழ்ந்து பேசுவதும், அவரை திடீரென சந்திப்பது எல்லாம் திமுகவின் சூழ்ச்சி. ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார்.
இதையும் படிங்க: நான் என்ன செத்தா போயிட்டேன்? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!
கடந்த 5 ஆண்டுகளாக ஐயா ஐயாவாக (ராமதாஸ்) இல்லை. தினமும் நிம்மதி இல்லாமல், தூக்கம் இல்லாமல் உள்ளேன். பெற்ற மகனையும் மருமகளையும் யாராவது ஊரின் முன்னாள் நேரலையில் பேசுவார்களா? வீட்டுக்கு வந்த மருமகளை பொது வெளியில் யாராவது விமர்சனம் செய்வார்களா? எனது மனைவி பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். ஐயா ஐயாவாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா? ஐயா ஐயாவாக இருந்து எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன்.
நான் பேசாமல் இருப்பதால் அவர்களுடைய கருத்து மட்டுமே மேலோங்குவது போல தோன்றுகிறது. ஆனால் தெளிவுக்காக காத்திருந்தேன். உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும். பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியில் பேசுவது அத்தனையும் பொய் யாரும் பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சனம் செய்யக் கூடாது. இதனை மகனாகவும் மருத்துவராகவும் சொல்கிறேன். 3 பேர் கட்டுப்பாட்டில் ராமதாஸ் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கர்ப்பிணியை தாக்குவது தான் காவல் அறமா? பொங்கி எழுந்த அன்புமணி!!