“வீரபாண்டியார் இன்று நம்முடன் இருந்தால்”... ஸ்டாலினுக்கு எதிராக வன்னியர்களை கொம்பு சீவிவிடும் அன்புமணி...!
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி , வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்க வேண்டும் என சேலத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
சேலம் இரும்பாலை பகுதியில் இன்று இரவு  நடைபெற்ற உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தற்போது 160 ஆவது சேலம் தினத்தை கொண்டாடி வருகிறோம். உருக்காலை போன்ற எண்ணற்ற அடையாளங்கள் நிறைந்த சேலம் மாவட்டத்தில்  பாயும் சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளில் கழிவுநீர் கலந்துள்ளது. நம் அருகே  உள்ள தண்ணீரை வைத்துக்கொண்டு, மேட்டூரில் இருந்து தண்ணீருக்காக காத்து நிற்கிறோம். சரபங்கா நதியில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 4 முதல் 6 டி.எம்.சி. தண்ணீர் வரை கிடைக்கும். ஆனால், அவை தவறான நீர் மேலாண்மையால் வீணடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
புதிய ஏரிகள், தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமித்தால், நமக்கான நீரை நாமே பூர்த்தி செய்ய முடியும்.
மேட்டூரில் இருந்து உபரி நீரை கொண்டு சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளை இணைத்தால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி, நிலத்தடி மட்டம் உயர்வதுடன், விவசாயமும் செழிக்கும். குடிநீர் பிரச்னையும் தீரும். விவசாயிகள் நலன் காக்க, மேட்டூர், காவிரி உபரிநீர் திட்டத்தை ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றார் . திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என கூறினார்கள். ஆனால், ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றினார்களா? 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் 45 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். அவர்களுக்கு வெறும் ஒன்பதரை நாள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர்.
அதேபோல் ஒரு கோடி 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது. தவறான வாக்குறுதிகள் கூறும் திமுகவுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என அன்புமணி கூறினார். கடந்த தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை திமுக இழந்தது. ஆனால், வரும் சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளையும் திமுக டெபாசிட்டை இழக்கும்.
இதையும் படிங்க: பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!
மூதறிஞர் ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த போது, இந்தியாவிலேயே முதல் முதலில் மதுவிலக்கு கொண்டு வந்த பகுதி சேலம் தான். ஆனால் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக், சந்து கடைகள் நிரம்பியுள்ளன. இந்தியாவிலேயே போதைப்பொருட்கள் அதிகம் புழங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அந்த அளவுக்கு போதைப்பொருட்கள் நடமாட்டம் தலைவிரித்தாடுகிறது.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை தர முதல்வர் ஸ்டாலின் மறுக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் கொடுக்க முடியும் என தற்போது கூறுகிறார் ஸ்டாலின். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது.
வீரபாண்டியார் இன்று நம்முடன் இருந்திருந்தால் இந்நேரம் வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும். சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமத்துவத்தை கடைப்பிடிக்கனும். பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசும் திமுகவினரை வரும் தேர்தலில் வெளியேன்ற வேண்டும் என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திமுக அரசை, தமிழக மக்கள் மன்னிக்கவே கூடாது. தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்றார்.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் டெங்கு பரவல்…! மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்… ராமதாஸ் வலியுறுத்தல்…!
 by
 by
                                    