“ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா... தொலச்சிடுவேன்...” - உச்சக்கட்ட ஆவேசத்துடன் எச்சரித்த அன்புமணி...!
“அய்யாவுடைய பாதுகாப்பிற்கு ஏதாவது ஒன்று ஆச்சு என்றால் தொலைச்சி போட்டுவிடுவேன்” என ராமதாஸ் உடன் இருப்பவர்களை அன்புமணி கடுமையாக எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 12 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்கு தொடர்பாக மாதாந்திர பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமதாஸுக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், நல்ல நிலையில் உடல் நலம் தேறியதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்த அன்புமணி அவரைக் காண வந்தார். ஆனால் அவர் ஐ.சி.யூ.வில் இருப்பதாக கூறி அப்பாவைச் சந்திக்க மகன் அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ராமதாஸை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையும் படிங்க: டெல்லி TO மதுரை... திமுக அரசுக்கு சம்மட்டி அடி! பந்தாடிய அண்ணாமலை...!
இதையடுத்து வேண்டுமென்றே அன்புமணியை சந்திக்க ராமதாஸ் மறுத்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அன்புமணி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உத்தண்டியில் நடைபெற்ற பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாசை சிலர் காட்சி பொருளாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். நம்முடைய மருத்துவர் ஐயா அவர்கள் நலமாக இருக்கிறார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றார். அந்த மருத்துவ பரிசோதனை ஏற்கனவே திட்டமிடப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது மருத்துவ பரிசோதனை முடிந்து நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ஆனால் சிலர் ராமதாஸ் மருத்துவ பரிசோதனைக்கு சென்றதை பயன்படுத்திக் கொண்டனர். சிலருக்கு போன் செய்து “அய்யாவுக்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்க... வந்து பாருங்க...” என அழைத்திருக்கிறார்கள். ஏதோ பொருட்காட்சி போல யார் யாரோ வந்து அய்யாவை பார்த்துவிட்டு சென்றுள்ளனர். 87 வயதில் எளிதாக தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கும் போது, அதைப் பற்றி கவலைப்படாமல் யார் யாரை எல்லாமோ ராமதாஸை பார்க்க அனுமதித்துள்ளனர்.
அவரை தூங்க விடாமல், பாத்ரூம் கூட செல்ல விடாமல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். “அய்யாவுடைய பாதுகாப்பிற்கு ஏதாவது ஒன்று ஆச்சு என்றால் தொலைச்சி போட்டுவிடுவேன்” என ராமதாஸ் உடன் இருப்பவர்களை அன்புமணி கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: குப்பை வண்டியில் கர்ப்பிணிகளுக்கு மருந்து... இவ்ளோ அலட்சியமா? விளாசிய அண்ணாமலை