×
 

டிடிவி தினகரன் மனைவிக்கு ஆண்டிபட்டி தொகுதி? பாஜக முடித்து வைத்த பேரம்!! பொறுமும் அதிமுக!

ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை போட்டியிட விடக் கூடாது என்று உள்ளூர் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், என்டிஏ கூட்டணியில் ஏற்பட்டுள்ள ஆண்டிபட்டி தொகுதி சர்ச்சை அ.தி.மு.க.வுக்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் போட்டியிட்டு அதிமுகவின் மிக முக்கிய கோட்டையாக விளங்கிய ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை போட்டியிட விடக்கூடாது என்று உள்ளூர் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி தொகுதி அதிமுகவின் வரலாற்று கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கூட சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தது. இந்நிலையில், என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்த பிறகு, டிடிவி தினகரன் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்திருந்தார். அவரது தரப்பு நிர்வாகிகள் ஏற்கனவே வீடு பிடித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.

ஆனால், இப்போது டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்ததால், ஆண்டிபட்டி அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். "எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை வேறு கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்", "ஆண்டிபட்டி அதிமுகவின் சொத்து" என்று உள்ளூர் தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக - அமமுக இணைப்பின் பின்னணியில் RSS! சக்சஸில் முடிந்த ஆபரேஷன்!!

டிடிவி தினகரன் தரப்பில், அவர் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக தனது மனைவி அனுராதா தினகரனை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்டிஏ கூட்டணியில் அமமுகவுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பாஜக தரப்பில் ஒரு ராஜ்ய சபா சீட் கூடுதலாக வழங்க முன்வந்துள்ளது. இதனால் டிடிவி தரப்பில் பெரிய அதிருப்தி இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், ஆண்டிபட்டி தொகுதியில் டிடிவி தினகரன் அல்லது அவரது மனைவி போட்டியிட்டால், உள்ளூர் அதிமுக தொண்டர்களின் ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் திமுக தரப்பினரும் ஆண்டிபட்டி தொகுதியில் தீவிர பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இன்று மாலை மதுராந்தகத்தில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் நேருக்கு நேர் சந்திப்பது இந்த பிரச்னைக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டிபட்டி தொகுதி விவகாரம் என்டிஏ கூட்டணியின் ஒற்றுமையை சோதிக்கும் முக்கிய தருணமாக அமைந்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி முடிவை அறிவிப்பதற்கு முன்பே இந்த உள் மோதல் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், ஆண்டிபட்டி போன்ற முக்கிய தொகுதிகளில் ஏற்படும் இத்தகைய பிரச்னைகள் கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளன.

இதையும் படிங்க: தேசவிரோதி உதயநிதி ஸ்டாலின்!! ஊழல் மற்றும் திறமையற்ற வாரிசு அரசியல்!! பியூஸ் கோயல் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share