×
 

5 நிமிடத்தில் கொத்து பரோட்டா ஆக்கிட்டேன்! முதல்வர் விஜயை மீண்டும் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்! புதிய சர்ச்சை!

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

.மு.க. முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. பல்வேறு அரசியல் வியூகங்களால் தோற்கடிக்கப்பட்டதாக கூறினார். மேலும், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததையும் குறிப்பிட்ட அவர், அந்த தொகுதியில் வெற்றி பெற்றவர் தன்னைப் பற்றி கூறிய கருத்துகளையும் விமர்சித்தார்.

முதல்வர் விஜயை மறைமுகமாக விமர்சித்த அவர், "தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் பேசுகிறார். பொதுக்கூட்டங்களில் உரையாற்றும்போது காகிதத்தை எடுத்து வாசிப்பது சினிமாவில் நடிப்பது போல இருக்கிறது. அந்த அணுகுமுறை அரசியலில் எடுபடாது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீங்க வந்து தவெக ஆட்சியை காப்பாத்த வேண்டிய அவசியமில்லை!! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

தொடர்ந்து பேசிய அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலும் இடைத்தேர்தல்களும் தி.மு.க. கூட்டணிக்கு முக்கியமானவை என்றும், கடந்த காலங்களைப் போலவே அனைத்து பகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரிக்கும் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில், கடந்த ஜூன் 20-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

அதையடுத்து த.வெ.க. நிர்வாகி அளித்த புகாரின் பேரில் போலீசார் அவதூறு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சூழலில், முதல்வர் விஜயை மீண்டும் விமர்சித்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேச்சு! அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாய்ந்தது வழக்கு!! விரைவில் கைது?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share