×
 

“நாங்கள் ரவுடிகளா?” - தவெகவுக்கு டைரக்ட் வார்னிங் கொடுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றாலும் பல இடங்களில் குறைவான ஓட்டுகள் மட்டுமே வாங்கி உள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசுகையில்,  நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒரு கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியாத ஒரு முதல்வராக தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் இருப்பார். என்றார். 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் மனதார ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களை நேரில் சந்தித்து சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் பெற்ற விபரமும் எதற்காக குறைந்த வாக்குகள் கிடைத்தது என்றும் ஒவ்வொரு பகுதியாக சென்று விளக்கம் கேட்டு வருகிறார். 

இதன்படி, தென்திருப்பேரை மணல்மேடு பகுதியில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது அதில்  முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் விளக்கங்கள் கேட்டார். 

இதையும் படிங்க: என்ன ஆச்சு... திடீர் மயக்கம்... அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

 பின்னர் அவர் பேசுகையில்,  பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றாலும் பல இடங்களில் குறைவான ஓட்டுகள் மட்டுமே வாங்கி உள்ளார்கள். மதத்தின் பெயராலும், சில ஜாதியின் பேராலும் வாக்குகளை பிரிக்கும் பணியை அவர்கள் செய்துள்ளார்கள். 

தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் புதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். அதற்கு பதிலாக ஏற்கனவே இருந்த திட்டத்திற்கு பெயர் மாற்றம் வேலையை செய்யக்கூடாது. எங்களது முதல்வர் கொண்டு வந்த எந்த திட்டத்தையாவது நீங்கள் நிறுத்த முடியுமா? 

நமது கட்சி கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அங்கு சென்று முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னைக்கு முட்டுக் கொடுப்பதில் இருந்து தள்ளி செல்கிறார்களோ அன்றைய தினம் அனைத்தும் கீழே விழுந்து விடும். இதுபோல் இந்த ஆட்சி வெகு சீக்கிரத்தில் விழக்கூடிய நிலையில் உள்ளது. 

தற்போது காவிரி பிரச்சனை பேசுவதற்காக இங்கிருந்து பெங்களூர் செல்கிறேன் என்று நமது முதல்வர் சொல்கிறார். அங்கு வராதீர்கள் என்று அவர்கள் எதிர்ப்பு கொடுக்கிறார்கள். இருந்தும் நான் அங்கு செல்கிறேன் என்று கூறுகிறார் முதல்வர். இங்கிருந்து அங்கு சென்று இடைஞ்சல் ஏற்பட்டால் அது நமக்கு கேவலம். அவர் நடிகராக இருக்கட்டும் அல்லது வேறு ஏதாவது இருக்கட்டும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அங்கு சென்று ஏதாவது நடந்தால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படும் நிலைமையை தமிழ்நாட்டு முதல்வர் செய்து வருகிறார். 

ஐந்து மற்றும் ஆறாம் தேதிகளில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒரு கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியாத ஒரு முதல்வராக தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் இருப்பார். படத்தில் நடிக்கின்ற பொழுது விஜய். அரசியலுக்கு வரும்போது ஜோசப் விஜய். எந்த வகையிலாவது நடித்து மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என்ற குறிக்கோளாக மட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார். 

இங்கு வரும் தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் என்னையும், கீதாஜீவனையும் ரவுடிகள் என்று கூறுகிறார். நாங்கள் என்ன ரவுடித்தனமா செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் மக்களுக்கு ஏதாவது செய்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பிய அனிதா ராதாகிருஷ்ணன் வெகு விரைவில் மீண்டும் நமது அண்ணன் மு க ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் மலரும் என்று தெரிவித்தார். மேலும் எந்த வகையிலாவது காவிரி தண்ணீரை நமக்கு கொண்டுவர வேண்டாமா? , இவர்கள் ஆட்சி நடத்தும் ஆக்கம் அப்படி உள்ளது என்றும் பேசினார். 

 

இதையும் படிங்க: "அராஜகம்"..! மக்கள் பாடம் புகட்டுவாங்க..! மார்க்கண்டேயன் கைது... அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share