×
 

என் பையனோட குண்டாசை ரத்து பண்ணுங்க… பாலியல் குற்றவாளி ஞானசேகரன் தாய் மனுத்தாக்கல்!

பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு குண்டாஸ் தேவையா என நீதிமன்றம் கேள்வி எழுப்பிவுள்ளது.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி அளித்த புகாரின் பேரில், செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் டிசம்பர் 25-ஆம் தேதியன்று 37 வயதாகும் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு மே 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தெரிவித்தது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தீர்ப்பை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அதிரடி தீர்ப்பை வழங்கினார். 

இதையும் படிங்க: இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் திடீர் மாற்றம்... இந்த மொழி கட்டாயம் - வெளியானது அதிரடி அறிவிப்பு

அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தனது குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஞானசேகரன் தரப்பில் அவரது தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு நீட்டிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுப்பியது. கொடுங்குற்றங்களை செய்த ஞானசேகரன் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதாக காவல்துறை தரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை.,: தனியார் கல்லூரிகளில் ஆக.18 முதல் வகுப்புகள் தொடக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share