மீண்டும் NDA கூட்டணியில் தினகரன்? அண்ணாமலை - TTV திடீர் சந்திப்பு...
அண்ணாமலையும் டிடிவி தினகரனும் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியலில் பேசு பொருளாக மாறியது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், தமிழக அரசியல் அரங்கில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அண்ணாமலை தலைமையில் பாஜக, அதிமுக, பட்டாளி மக்கள் கட்சி, ஓ. பன்னீர்செல்வம் குழு மற்றும் அமமுக ஆகியவற்றுடன் என்டிஏ கூட்டணியை வலுப்படுத்தியது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் 18.2% வாக்குகளைப் பெற்றது, இதில் அமமுகவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், 2025 செப்டம்பர் தொடக்கத்தில் அமமுக என்டிஏவில் இருந்து விலகியது. இதற்கு முக்கிய காரணம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பது. அதிமுகவை தூக்கி பிடிக்கிறார்கள் என தினகரன் தெரிவித்தார். இபிஎஸ்-இன் தலைமையில் அதிமுக என்டிஏவில் இணைந்ததும், அமமுக மற்றும் ஓபிஎஸ் குழு புறக்கணிக்கப்பட்டதாக தினகரன் குற்றம் சாட்டினார்.
இந்த விலகலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தினகரன், அண்ணாமலை அனைவரையும் அரவணைத்து நடத்தினார் என்று கூறினார். அண்ணாமலை, தனது பதவி நீக்கத்திற்குப் பிறகும் பாஜகவின் முக்கிய அமைப்பாளராக இருந்து, தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். செப்டம்பர் 4-ஆம் தேதி, அவர் ஓபிஎஸ் மற்றும் தினகரனை சந்தித்து, என்டிஏவில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று வலியுறுத்தினார். வாக்குவாதம் எவருக்கும் உதவாது. 2026-ல் திமுகவை வீழ்த்துவது முக்கியம் என்று அவர் கூறினார்.
விரைவில் டிடிவி தினகரன் சந்திப்பேன் என்ற அண்ணாமலை கூறியிருந்த நிலையில், டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு நிகழ்ந்தது. சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் அண்ணாமலை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.
இதையும் படிங்க: அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை... TTV குறித்த கேள்விக்கு நைனார் சூசக பதில்!
பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதற்கு முன்னதாக அண்ணாமலையை பதவியில் இருந்து பாஜகவின் தலைமை நீக்கியது. நைனார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்தனர். எடப்பாடி பழனிச்சாமியின் அழுத்தத்தால் தான் அண்ணாமலையை மாற்றியதாக சில கருத்துக்கள் பரவின. அதன் பிறகாக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டதாகவும், அவர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே தூக்கிப்பிடித்து பேசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் சமூகமாக சென்றதாகவும், கூட்டணியை வழிநடத்தும் தன்னை நயினார் நாகேந்திரனுக்கு கிடையாது என்றும் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். அண்ணாமலையை போல் இல்லை என்று விமர்சித்து வந்த டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் TTV, OPS...! என்டிஏ கூட்டணி குறித்து இபிஎஸ் உடன் பாஜக தலைகள் தீவிர ஆலோசனை...