×
 

என்ன தலை தவெக பக்கம் திரும்புது? விஜய் சொன்னது ரைட்... ஆதரித்த அண்ணாமலை...!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கருத்தை வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது. முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார். பாஜகவை கொள்கை எதிரி என கூறும் விஜய் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

இருப்பினும் விஜயை இயக்குவது பாஜக என்றும் மத்திய அரசே ஒரு கட்சியை ஆரம்பிக்க வைத்து தமிழக அரசுக்கு எதிராக செயல்பட வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விஜயின் கருத்தை வரவேற்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடு செல்கிறாரா அல்லது முதலீடு செய்ய வெளிநாடு செல்கிறாரா என்ற கேள்வியை விஜய் முன் வைத்திருந்தார்.

இதையும் படிங்க: அமித்ஷா பின்னணியில் விஜய்...கட்சி ஆரம்பிக்க சொன்னதே BJP தான்... அப்பாவு பரபரப்பு பேட்டி...!

முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான விஜயின் கருத்தை வரவேற்பதாக அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் யாராவது குரல் கொடுக்க நினைத்தால் பாஜகவின் B டீம் என கூறுவதாகவும் நடிகர் ரஜினியை அடிக்கடி சந்திப்பேன் என்றும் அவருடனான சந்திப்பில் அரசியல் இருக்காது எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: தவெக மீது பொய் புகார்... FACT CHECK-ல் வெட்ட வெளிச்சமான உண்மை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share