×
 

நெருங்கிய தேர்தல்..! வேட்பாளரை ஆதரிக்க சென்ற அண்ணாமலை ஹெலிகாப்டரில் தீவிர சோதனை..! பதற்றம்..!!

பாஜக வேட்பாளரை ஆதரிக்கச் சென்ற அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவுக்கு என் டி ஏ கூட்டணியில் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிக்கப்பட்டது. 

உதகை சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போஜராஜன் போட்டியிடுவது தமிழ்நாடு அரசியலில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மையமான இந்த மலைப்பகுதி தொகுதியான உதகமண்டலம் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க இடமாக இருந்து வந்தாலும், பாஜக இங்கு தனது தடத்தை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சார்பில் போஜராஜன் அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கிய அவரது அரசியல் பயணம், பின்னர் பாஜகவுக்கு மாறியது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இதே உதகை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார்.

இதையும் படிங்க: குப்பை அள்ளுவதில் கூட ஊழல்..! கையாலாகாத திமுக அரசு... முதல்வரை வெளுத்த அண்ணாமலை..!

2026 தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் உதகை தொகுதி போஜராஜனுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புறப்பட்டார். ஹெலிகாப்டர் மூலமாக உதகைக்கு அண்ணாமலை புறப்பட்டிருந்தார். அப்போது அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். பிரச்சார பயணத்திற்கு கிளம்பிய அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: FCRA கொண்டு வந்ததே காங்கிரஸ்தான்..! முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம்..!! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share