ரீல்ஸ்- ஆ முக்கியம்..! CM விஜயே இதை ஏத்துக்க மாட்டாரு..! கொந்தளித்த அண்ணாமலை..!
அரசு பள்ளியில் முதல்வரின் புகைப்படத்தை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் சென்று முதல்வர் புகைப்படத்தை மாட்டி மாணவர்களுக்கு பாடம் எடுத்து தவெக ரீல்ஸ் வெளியிட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து எந்த ஒரு முறையான நெறிமுறை படி நடந்து கொள்வது என்பது கேள்விகுறியாகவே உள்ளது. மேலும்,தவெகவின் கட்சி நிர்வாகிகள் அரசு பொறுப்பில் இருப்பதாக நினைத்து கொண்டு பல்வேறு இடங்களில் அதிகாரப்போக்கினை கையில் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அந்த பகுதியை சார்ந்த தவெக நிர்வாகிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவருடன் சென்று முதல்வர் விஜய் புகைப்படத்தை காண்பித்து இவர் யாரென்று தெரிகிறதா இவர் தான் முதல்வர் உங்களுக்கு மாமா எங்களுக்கு அண்ணன் என்று பேசியும், மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!
ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன என குற்றம் சாட்டினார். ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் விஜயே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம் என்றும் மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் "WE THE LEADER"..! சரியான பாதை தான்... அண்ணாமலை உறுதி..!!