×
 

விஜய் அரசுக்கு நேரடி செக்! அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்! மூடப்படாத மதுக்கடைகள் பட்டியல் வெளியீடு!

சென்னையில் டாஸ்மாக் கடைகள் முறையாக மூடப்படவில்லை என, 'வீ தி லீடர்' இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை, ஆதாரங்களையும், பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பிறகு, பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இயங்கி வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டதாக அரசு அறிவித்தது. அதன்படி, அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டதாக டாஸ்மாக் துறையை கவனிக்கும் அமைச்சர் விக்னேஷ் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், 'வீ தி லீடர்' இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை, அரசின் இந்தக் கூற்றுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தனது இயக்கத்தினர் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில், பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் இன்னும் பல டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆதாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கடைகளின் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அரசு கூறியபடி அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தால், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கடைகள் எப்படி தொடர்ந்து இயங்குகின்றன என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

மேலும், சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ள 'வீ தி லீடர்' இயக்கம் திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகள் குறித்து பொதுமக்களே நேரடியாக மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்க வேண்டும் என்றும், விரும்புவோர் 'வீ தி லீடர்' இயக்கத்தின் மூலமாகவும் புகார்கள் அளிக்கலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"மது அரக்கனை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சட்டப்படி மூடப்பட வேண்டிய கடைகள் முழுமையாக அகற்றப்படும் வரை இந்த முயற்சி தொடரும்" என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு அல்லது டாஸ்மாக் நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. இதனால், அரசின் நடவடிக்கை மற்றும் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: ஒன்றிணைவோம்! தமிழ்நாட்டை காப்போம்!! We The Leader இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை அழைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share