×
 

அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...! 

இடையில் மதுரைக்கு விசிட் அடித்த அமித் ஷா, கட்சிக்குள் உட்கட்சி பூசல் இருக்கக்கூடாது, மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் ஒத்துழைத்து பணி செய்ய வேண்டும் என அண்ணாமலையை வைத்துக்கொண்டே வார்னிங் கொடுத்திருந்தார். 

அண்ணாமலை அன்புக்கூட்டம் என்ற பெயரில் சோசியல் மீடியாவில் வேக வேகமாக ஷேர் செய்யப்பட்டு வரும் விண்ணப்ப படிவம் ஒன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாம். அதிமுகவுடன் கூட்டணி இறுதியானதையடுத்து எடப்பாடி பழனிசாமி ரெக்கமெண்டில் நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை பதவி விலகினார்.

ஆனால் உண்மையில் அண்ணாமலை பதவியைக் காத்துக்கொள்ள போராடியதாகவும், தலைமையோ அதிமுக கூட்டணிக்காக அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான அண்ணாமலையோ தனது பவரைக் காட்டுகிறேன் என்ற பெயரில் பாஜக பொதுக்கூட்டங்களில் தமது பெயரை உச்சரிக்கும் போது எழும் ஆரவாரங்கள் மூலமும் காட்டி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பாஜக கூட்டணி பற்றி கூட விமர்சித்து வந்தார். இடையில் மதுரைக்கு விசிட் அடித்த அமித் ஷா, கட்சிக்குள் உட்கட்சி பூசல் இருக்கக்கூடாது, மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் ஒத்துழைத்து பணி செய்ய வேண்டும் என அண்ணாமலையை வைத்துக்கொண்டே வார்னிங் கொடுத்திருந்தார். 

இதையெல்லாம் நல்ல பிள்ளையாக அண்ணாமலை கேட்டுக்கொள்வார் என்று பார்த்தால், மீண்டும் சோசியல் மீடியாவில் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ‘ANNAMALAI ANBU KOOTTAM’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப்பாகவும் ஃபேஸ்புக், ட்விட்டரிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இது முழுக்க முழுக்க அண்ணாமலையை புரோமோட் செய்து வருகிறது. தற்போது  ANNAMALAI ANBU KOOTTAM – MEMBERSHIP FORM என்ற உறுப்பினர் சேர்க்கை படிவம் ஒன்று வைரலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: திருப்புவனம் இளைஞர் மரணம்: நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டோம்.. கொதித்தெழுந்த அண்ணாமலை..!

பாஜகவின் கட்சி வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த உறுப்பினர் படிவத்தில் ஒருவரைப் பற்றிய தகவல்கள் மட்டும் இடம் பெறாமல் மாத வருமானம், ஆதார்- பான் கார்டு விவரங்கள், சட்டமன்றம்- மக்களவை தொகுதி விவரங்களுடன் பூத் நம்பரும் கேட்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டும் அல்ல ஒட்டுமொத்த சீனியர்களே அப்செட்டில் இருக்கிறார்களாம். இந்த சோசியல் மீடியா குரூப் அண்ணாமலை ரசிகர்களின் மன்றமாம். அவரது துதியை சோசியல் மீடியாவில் பாடக்கூடியவர்கள் சேர்ந்து இதனை நடத்தி வருவதாக செய்தி. 

இதையும் படிங்க: நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share