×
 

இதுலாம் முதல்வர் பண்ணுற காரியமா? இவ்ளோ தப்பு பண்ணிட்டு சுப்ரீம் கோர்ட் எதுக்கு போறீங்க! அண்ணாமலை விளாசல்!

' திமுக அரசு மத மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா?'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப சர்ச்சையில் திமுக அரசு நீதிமன்ற உத்தரவை மீறி மத மோதலை தூண்டி வருவதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் “அனைவருக்குமான முதல்வரா? ஹிந்துக்களுக்கான முதல்வரா?” என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அமைச்சர் ரகுபதியின் நீதிபதியின் தீர்ப்பு குறித்த விமர்சனத்தையும், ஸ்டாலினின் சமூக வலைதள பதிவுகளையும் தோலுரித்தார். இந்த விமர்சனம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய மத அரசியல் சர்ச்சையை மேலும் சூடேற்றியுள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உரிமையை மீட்டெடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 1 அன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். 1920-ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பின்படி, தர்கா மற்றும் நெல்லித்தோப்பு ஆகியவை முஸ்லிம் சொத்து என்றும், மற்ற மலைப் பகுதி ஹிந்து கோயில் சொத்து என்றும் தெளிவுபடுத்தி, தீபம் ஏற்ற உத்தரவிட்டார். 

ஆனால் திமுக அரசு “சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்” என்று தடுத்து, போலீசார் பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். டிசம்பர் 3 அன்று டிவிஷன் பெஞ்ச் உத்தரவை உறுதிப்படுத்தியும் தீபம் ஏற்கப்படவில்லை. இதற்குப் பதிலாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதையும் படிங்க: உரைக்கவில்லையா ஸ்டாலின் உங்களுக்கு?! செம்மொழி பூங்கா திறப்பு விழா சர்ச்சை! அண்ணாமலை காட்டம்!

இந்த சூழலில் அண்ணாமலை, “திமுக அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. தீபத்தூண் கோயில் சொத்து என்பது உறுதியானது. அதை எதிர்த்து செயல் அலுவலர் மேல்முறையீடு செய்வதன் பின்னால் அரசு தூண்டுதல் உள்ளது” என்று குற்றம் சாட்டினார். அமைச்சர் ரகுபதி “நீதிபதியின் தீர்ப்பு குறித்து விமர்சித்ததை “பொய் வாதம்” என்று அண்ணாமலை விமர்சித்தார். 

“144 தடை உத்தரவு மோசடி என நீதிமன்றம் கண்டித்தும், போலீசார் சட்டவிரோதமாக தடுத்தனர். வக்பு போர்டு, தர்கா தரப்பு மேல்முறையீடு செய்யலாம், ஆனால் செயல் அலுவலரின் கடமை கோயில் சொத்தைப் பாதுகாக்கவே” என்றார்.

அண்ணாமலை தொடர்ந்து, “சிக்கந்தர் மலை பெயர் வைத்ததையும், ‘ஆடு கோழி வெட்டுவோம்’ என்று சொன்னதையும் அரசு ஆதரித்தது. ஆனால் ஹிந்து பக்தர்களுக்கு எதிராக தலைபட்சமாக செயல்படுகிறது” என்று கூறினார். 161 கோவில்களை இடித்த சம்பவத்தை உதாரணமாகக் காட்டி, “நீதிமன்றம் உத்தரவு அளித்ததும் அதிகாலை 2 மணிக்கு இடித்தனர். அப்போது நீதிமன்றம் தேவைப்பட்டது. இப்போது தீபத்தூணுக்கு நீதிமன்றம் தேவையில்லை என்று சொல்லி சட்டப்பிரச்சனை உருவாக்குகிறார்கள்” என்று விமர்சித்தார். சட்டத்துறை அமைச்சர் “பழைய தீர்ப்புகளைத் திரித்து பேசுகிறார்” என்றும் கூறினார்.

முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைதள பதிவுகளையும் அண்ணாமலை தோலுரித்தார். “மதுரைக்கு வளர்ச்சி அரசியலா அல்லது... அரசியலா? என்று டுவிட் போட்டிருக்கிறார். இது சிறு குழந்தைகள் போட்டால் ஏற்றுக்கொள்ளலாம். முதல்வர் போடும் டுவிட்டா? ‘டேஷ்’ என்று போட்டால் என்ன? அதை அவர் தானே சொல்ல வேண்டும். இவ்வளவு சிறுபிள்ளைதனமான பிரச்சனைகளைச் செய்துவிட்டு, ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா? ஹிந்துக்களுக்கான முதல்வரா? முஸ்லிம்களுக்கான முதல்வரா? கிறிஸ்தவர்களுக்கான முதல்வரா?” என்று கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை மேலும், “நீதி நிலைநாட்டல் முதல்வரின் கடமை. சிஐஎஸ்எப் அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். நீதிமன்றம் சொல்வதை பின்பற்றவில்லை. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர், ஆனால் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் சர்ச்சை டிசம்பர் 1 அன்று நீதிமன்ற உத்தரவுடன் தொடங்கியது. டிசம்பர் 3 அன்று தீபம் ஏற்றம் நடக்கவில்லை. டிசம்பர் 4 அன்று போலீசார் தடுத்தனர். இதை “இந்து விரோதம்” என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. முதல்வர் ஸ்டாலின், “மதுரைக்கு வளர்ச்சி தேவை, அரசியல் அல்ல” என்று பதிலளித்துள்ளார். 2026 தேர்தலில் இது மத அரசியலாக மாறலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அண்ணாமலையின் விமர்சனம், பாஜகவின் தமிழக உத்தியை வலுப்படுத்துகிறது.

இதையும் படிங்க: ஓட்டு அரசியலுக்காக தாஜா செய்யும் திமுக!! வழிபாட்டு உரிமையை பறிக்குது!! பார்லி.,-யில் அனல் பறக்கும் விவாதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share