அரசுப்பணிக்கு ரூ.15 லட்சம் லஞ்சம்!! வாரி சுருட்ட பாக்குறீங்களா? வெளுத்து வாங்கும் அண்ணாமலை!
நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூல் நடப்பது பற்றி பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் கூறுவதாக, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, நாளை (நவம்பர் 26) நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்கள் நேர்முகத் தேர்வில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசுப் பணி நியமனத்தில் தி.மு.க. அமைச்சர்கள் பணம் சம்பாதிப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் இதை அறியாமல் இருக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலையின் அறிக்கையின்படி, பல லட்சம் தமிழக இளைஞர்கள் அரசுப் பணிக்காக பல ஆண்டுகள் உழைத்து வருகின்றனர். ஆனால், தி.மு.க. அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். ஏற்கெனவே நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு துறையில் பணி நியமனத்துக்கு பணம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கூட்டுறவுத்துறை அரசுப் பணியாளர்கள் நேர்முகத் தேர்வில் ஒரு பணியிடத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தன்னைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். முன்னாள் சாராய அமைச்சர் அரசுப் பணி நியமனத்தில் பணம் வாங்கியதால் ஒன்றரை ஆண்டுகள் சிறை சென்று, அமைச்சர் பதவியை இழந்ததை தி.மு.க. அமைச்சர்கள் மறந்து விட்டார்களா என்று அவர் கேட்டுள்ளார். அல்லது, ஆட்சி இருக்கும் வரை லாபம் என்று வாரிச் சுருட்டலாம் என்று முடிவு செய்துள்ளார்களா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: இப்போ தும்முனா சரியா இருக்கும்!! மோடி வரும் நேரம் மெட்ரோ சர்ச்சையை கிளப்பியது ஏன்?
முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சர்கள் பணம் வசூலிப்பது தெரியாத அளவுக்கு பொறுப்பற்றவரா, அல்லது தெரிந்தே இவை நடக்க அனுமதிக்கிறாரா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நாளை நடக்கும் நேர்முகத் தேர்வில் நேர்மையான, திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தனது பொறுப்பை உணர்ந்து தேர்வு நேர்மையாக நடக்க உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பணி நியமனத்தில் ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் கோட்டையை அசைக்க களமிறங்கும் இபிஎஸ்!! குறி வைக்கப்படும் ஈரோடு, கோபி தொகுதிகள்!