×
 

தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றம்... அண்ணாமலைக்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு...!

மாநில தலைவர் என்ற பொறுப்போடு சேர்த்து மத்திய அமைச்சர் பதவியும் அண்ணாமலைக்கு கொடுக்க தேசிய தலைமை தயாராக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

விரைவில் பாஜக மாநில தலைமை மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த தேர்தலில் தமிழக பாஜக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. முக்கியமாக 2024 தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெறாமல், குறிப்பாக 3 சதவீத வாக்குகளை கூட பெறாமல் தமிழக பாஜக அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டசூழலில் தமிழக பாஜாக தலைமை மீது தேசிய தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் மாநில தலைமை மாற்றப்படக்கூடிய திட்டத்தில் டெல்லி பாஜக தலைமை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 முக்கியமாக இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையாக மற்றும் பெரும்பாலும் வெற்றி வாய்ப்பு குறைந்த தொகுதிகளை பெற்றது, சில முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு மற்ற தொகுதிகளில் பெரிதாக கவனம் செலுத்தாமல் கொடுக்கக்கூடிய தொகுதிகளை அவர்கள் வாங்கி கொண்டது என பல காரணங்கள் தமிழக பாஜக தலைமை மீது முன்வைக்கப்படுகின்றன. 

இதையும் படிங்க: வாழ்த்துகள் விஜய்..! தவெகவின் அமோக வெற்றி..!! அண்ணாமலை அன்புமழை..!!

அதுமட்டுமின்றி எப்படியாவது இந்த முறை இரட்டை இலக்கத்தில் சட்ட பேரவைக்குள் உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்பது தான் தேசிய தலைமையினுடைய திட்டமாக இருந்தது. ஆனால் கடந்த முறை இருந்த  நான்கு எம்எல்ஏக்கள் கூட இந்த முறை சட்டப்பேரவைக்குள் செல்ல முடியாமல் ஒரே ஒருவர் தான் வெற்றி பெற்றிருந்தார். எனவே பெரும் வெற்றி வாய்ப்பை கைநழுவ விட்டதாக பாஜக தலைமை கருதுகிறது. 2024ல் தமிழக பாஜக 12% வாக்குகளை பெற்று மூன்றாவது கட்சியாக இருந்தது. ஆனால் இந்த முறை முழுமையாக 3% வாக்குகளை கூட பெற முடியாமல் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே இதுபோன்ற பல்வேறு ]காரணங்களால் மாநில தலைமையின் மீது தேசிய தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் மாநில தலைமையை மாற்றக்கூடிய நடவடிக்கைகளை  மேற்கொள்வார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.

மேலும் வரக்கூடிய 21ஆம் தேதி தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் தமிழகம் வர இருப்பதாகவும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தோல்விக்கான காரணங்கள் என்ன?, எங்கெங்கு சிக்கல்கள் இருந்தது போன்ற தகவல்களைப் பெற்று, அதனை தேசிய தலைமையிடம் சமர்ப்பித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் என்ற ஒரு திட்டமும் டெல்லி பாஜக தலைமையிடம் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. 

மாநில தலைவர் என்ற பொறுப்போடு சேர்த்து மத்திய அமைச்சர் பதவியும் அண்ணாமலைக்கு கொடுக்க தேசிய தலைமை தயாராக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தற்பொழுது அமெரிக்காவில் அண்ணாமலை இருந்து வரக்கூடிய சூழலில், அவர் மீண்டும் தமிழகத்திற்கு வந்த பிறகுதான் அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பது தெரியும். இருப்பினும் கூட அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது அவர் தனியாக கட்சி தொடங்கக்கூடிய ஒரு திட்டத்தில் இருந்து வருவதாகதான் கூறியுள்ளனர். எனவே இது போன்ற ஒரு சூழலில் டெல்லி தலைமை என்ன முடிவெடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 

இதையும் படிங்க: அசாம், மேற்கு வங்கத்தில் வெற்றிவாகை சூடும் பாஜக..!! மனதார வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share