அக்டோபர் 15! அண்ணாமலையின் புதிய திட்டம்! அப்துல் கலாம் பிறந்தநாளில் தொடங்கும் ‘அரசியல் அறநெறி மையம்’!
ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கொள்கைகளை முன்னெடுத்து, அரசியலில் அறநெறியை வளர்க்கும் நோக்கில் புதிய மையம் ஒன்றை தொடங்க உள்ளதாக ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் பேய்க்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில், அவரது நினைவு நாளையொட்டி அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அப்துல் கலாமின் வாழ்க்கை, சிந்தனைகள் மற்றும் அரசியல் குறித்த அவரது பார்வைகள் குறித்து பேசினார்.
அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று அப்துல் கலாம் விரும்பியதாக குறிப்பிட்ட அண்ணாமலை, இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியில் கலாம் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது என்றார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு என்ன ஆச்சு?... கலாம் நினைவிடத்தில் நின்று சொன்ன ஷாக்கிங் வார்த்தை... ஆடிப்போன அரசியல் களம்...!
மாணவர் பருவத்தில் இருந்தே அப்துல் கலாமின் உரைகளை கேட்டு வளர்ந்ததாக தெரிவித்த அவர், கலாம் காட்டிய வழியில் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறினார்.
அரசியலில் நல்ல நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்பதில் அப்துல் கலாம் உறுதியாக இருந்ததாகவும், தகுதியானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவரது கனவை முன்னெடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, வரும் அக்டோபர் 15-ம் தேதி கோவையில், அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி ‘அரசியல் அறநெறி மையம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட உள்ளதாக அவர் அறிவித்தார்.
இந்த மையம் மூலம் அரசியல் துறையில் நேர்மை, பொறுப்பு மற்றும் மக்கள் சேவை குறித்த விழிப்புணர்வை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறிய அண்ணாமலை, ஒரு ஆண்டுக்குள் ஒரு லட்சம் பேர் இந்த மையத்தின் மூலம் தகுதி பெறும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
அப்துல் கலாம் கனவு கண்ட இளைஞர்கள் பங்கேற்கும், நல்ல அரசியல் சூழலை உருவாக்கும் முயற்சியாக இந்த மையம் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் புதிய தலைமுறையினரை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி எவ்வாறு செயல்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய அண்ணாமலை.. குல்லாவுடன் கலாம் நினைவிடத்தில் மரியாதை.. நெகிழ்ச்சி சம்பவம்..!!