வானதியால் வந்த வினை... அண்ணாமலையை அம்போன்னு விட்ட பாஜக... தலைமைக்கு பறந்த பகீர் கடிதம்...!
அதிமுக பாஜகவின் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கோவையில் அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோவையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது, இதில் வானதி சீனிவாசன் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. முக்கியமாக அண்ணாமலை இந்த தேர்தலில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், திருப்பூரில் பல்லடம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிட விரும்பியதோடு, அந்தந்த தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்ததுவது, களப்பணியாற்றுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு கோயம்புத்தூரில் ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கோவை வடக்கு தொகுதி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திருப்பூரிலும் திருப்பூர் தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை விரும்பிய தொகுதி ஒதுக்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அப்செட்டில் இருந்த அண்ணாமலை, நான் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்ற ஒரு கடிதத்தை பாஜக தலைமைக்கு அனுப்பி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.
ஏனென்றால் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கிய 27 தொகுதிகளும் அவருக்கு திருப்தியாக இல்லை என்ற ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. பியூஷ் கோயலை நேற்று முன்தினம் தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசிய அண்னாமலையிடம் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதே அண்ணாமலை இந்த தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இருக்கக்கூடிய தொகுதிகள் என்பதையும், இழுபறியான பல தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பியூஸ் கோயலிடம் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கோவிலில் பாஜக பிரமுகர் அண்ணாமலை சாமி தரிசனம்... மனமுருகி வழிபாடு..!!
திருவண்ணாமலை, ஆவடி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளை திமுக கோட்டை என்றே சொல்லலாம். அதேபோல் உதகையில் காங்கிரஸ், தளியில் கம்யூனிஸ்ட் என திமுகவின் கூட்டணி கட்சிகள் வலுவாக உள்ளன. எனவே தொகுதிகள் உடன்பாட்டில் பெரிய அளவில் அண்ணாமலைக்கு திருப்தி இல்லை என்ற ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் வானதி சீனிவாசன் மற்றும் எல்.முருகனுக்காக தொகுதிகளை கேட்டு பெற்ற பாஜக, தன்னை தவிர்த்துவிட்டதாகவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் அண்ணாமலை புலம்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் வரக்கூடிய தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவில் அண்ணாமலை இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்கா எங்களை தாக்கினால் இந்தியாவை அடிப்போம்!! டெல்லி , மும்பை மீது குண்டு வீசுவோம்! பாக். முன்னாள் தூதர் திமிர்!